"அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் SC, ST, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை" -...
என்னைவிட ஜோ ரூட்டுதான் தொடர் நாயகன் விருதுக்குத் தகுதியானவர்: ஹாரி புரூக்
தொடர் நாயகன் சர்ச்சை குறித்து ஹாரி புரூக், “என்னைவிட ஜோ ரூட்டுக்குத்தான் இது மிகவும் பொருத்தமானது” எனக் கூறியுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ‘ஆண்டா்சன் - டெண்டுல்கா் கோப்பை’ டெஸ்ட் கிரிக்கெட் தொடா், பரபரப்பாக முடிந்தது. இந்திய அணி தொடரை 2-2 என சமன்செய்தது.
இந்தத் தொடரில் இங்கிலாந்தின் சார்பாக ஹாரி புரூக், இந்தியாவின் சார்பாக ஷுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்கள்.
கடைசி இன்னிங்ஸில் அதிரடியாக சதம் அடித்த ஹாரி புரூக் ஆட்டமிழந்ததும் விக்கெட்டுகள் படிப்படியாக இழந்து இங்கிலாந்து தோற்றது.
தொடர் நாயகன் விருது குறித்து ஹாரி புரூக் பேசியதாவது:
ஜோ ரூட் ரன்களை குவித்த அளவுக்கு நான் எடுக்கவில்லை. அதனால், அநேகமாக அவருக்குத்தான் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கோடைக்காலத்தின் நாயகன் ஜோ ரூட். பல ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறார்.
நாங்கள் சிறப்பான இடத்தில் இருந்தோம். கண்டிப்பாக இந்தத் தொடர் மிகவும் சிறப்பானது. 2-2 இப்படியாக இருக்குமென நான் நினைக்கவில்லை என்றார்.
இந்தத் தொடரில் ஹாரி புரூக் 53.44 சராசரி உடன் 481 ரன்கள் எடுத்திருக்க, ஜோ ரூட் 67.12 சராசரியுடன் 537 ரன்கள் குவித்தார்.