செய்திகள் :

"அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் SC, ST, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை" - சு.வெங்கடேசன்

post image

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனைப் பேர் பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை (எண். 2469/04.08.2025) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரிடம் எழுப்பி இருந்தேன். அதற்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி அளித்துள்ள பதில் பேரதிர்ச்சியைத் தருகிறது.

பங்கஜ் சௌதுரி
பங்கஜ் சௌதுரி

பிரதிநிதித்துவம் பாதாளத்தில்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமுள்ள 9 தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர் கூட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் இல்லை. பழங்குடியினர் இல்லை. பெண்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இயக்குநரவை குறித்துத் தரப்பட்டுள்ள விவரங்களும் இப்படித்தான் உள்ளன. மொத்தமுள்ள 98 இயக்குநர்களில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள் 6 பேர். பழங்குடியினர், சிறுபான்மையினர் தலா ஒருவர். பெண்கள் எண்ணிக்கை 12 பேர். மக்கள் தொகை சதவீதத்திற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்தான்.

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

எல்.ஐ.சியின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 13 பேரில் பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் எவருமே இல்லை. ஒரே ஒருவர் பழங்குடியினர். ஒரே ஒரு பெண். எல்.ஐ.சியின் தலைவர் பொறுப்பில் உள்ளவரும் மேற்கண்ட பிரிவினைச் சேர்ந்தவர் இல்லை.

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 48 பேரில் பட்டியல் சாதியினர் 5 பேர் மட்டுமே. சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 18 பேர் பெண்கள்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் 6 பேரில் பட்டியல் சாதியினர் ஒருவர். சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 3 பேர் பெண்கள்.

சாதிய பாரபட்சம்

அமைச்சரின் பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதிப் பாகுபாடுகளின் வெளிப்பாடே. இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்குப் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது சாட்சியம். அரசு நிறுவனங்களின் கதியே இதுவென்றால் தனியார் நிறுவனங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும்" என்று சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

உ.பி. வெள்ளப் பாதிப்பு: "கங்கை உங்களைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லும்" - பாஜக அமைச்சர் பேச்சு

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், பாதிக்கப்பட்டவர்களிடம் கங்கை நதி உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்று சர்ச்சைக்குரிய வகையில் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "போராடுபவர்களைத் தவறான வழியில் திசை திருப்புகின்றனர்" - சேகர் பாபு

சென்னையில் துப்புரவுப் பணிகள் தனியார் மயமாவதை எதிர்த்து ரிப்பன் மாளிகைக்கு வெளியில் பணியாளர்கள் போராடி வரும் சூழலில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.முறையாகத் தகவல் ... மேலும் பார்க்க

US Tariff: ``ட்ரம்பை அழைக்க மாட்டேன்; மோடியை அழைப்பேன்'' - பிரேசில் அதிபர் பேசியது என்ன?

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva), 'அமெரிக்கா விதித்துள்ள வரிகளைக் குறித்து விவாதிக்க எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம்', என்ற ட்ரம்ப்பின் அழைப்பை நிராகரி... மேலும் பார்க்க

`ஆணவக்கொலை தனிச்சட்டம், இடைநிலை சாதியினர் வாக்குகளை பாதிக்காது!’ - முதல்வரை சந்தித்த திருமாவளவன்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தனிச்சட்டம் தேவை என திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்... மேலும் பார்க்க

திருப்பூர் SI கொலை: `தப்பிக்க முடியாது எனத் தெரிந்தும் ஏன்?’ - அண்ணாமலை சொல்லும் 3 காரணங்கள்

திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் பணியின் போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சென்ற அழகுராஜா என்ற ஆயுதப்படைக் காவலர் காயமடைந்து... மேலும் பார்க்க

`தூய்மைப் பணியாளர்களை வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு!' - ஆதவ் அர்ஜுனா

சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 5 நாட்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா. இதுகுறித... மேலும் பார்க்க