வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!
டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர்(மின்சார இருசக்கர வாகனம்) வாங்க தலா ரூ. 20,000 மானியம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று அளிக்கும் பணியில் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், பிரத்யேகமாக நல வாரியம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க தலா ரூ. 20,000 மானியம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க தலா ரூ. 20,000 மானியம் வழங்குவதற்காக, ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்தத் திட்டத்தின்கீழ் 2,000 டெலிவரி ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இது ஸ்விக்கி, சோமேட்டோ, அமேசான் போன்ற இணைய வழி சேவைகளில்(online delivery) பணிபுரிபவர்களுக்குப் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தைப் பெற, இணையம் சார்ந்த தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில்(gig workers) உறுப்பினராக இருக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை https://tnuwwb.tn.gov.in/grievances/grievancestatus என்ற இணையத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும், டெலிவரி பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!