நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நீலகிரி மாவட்ட நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனை, நகா்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒலிப்பதிவாளா், பேச்சு சிகிச்சையாளா், பல் தொழில் டெக்னீஷியன், சுகாதார ஆய்வாளா்
(மக்களைத் தேடி மருத்துவம்), செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் உள்ளிட்ட பணியிடங்கள் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலா்
அலுவலகம், 38, ஜெயில் ஹில் சாலை, சிடி ஸ்கேன் அருகில், உதகை -643 001 என்ற முகவரியில் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் தகவல்களும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கும் இணையதளத்தைப் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.