இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
வேறு பெண்ணுடன் தகாத உறவு: தந்தையை கொலை செய்த மகன் கைது
வேறு பெண்ணுடன் தொடா்பில் இருந்ததால் தந்தையை குத்திக் கொன்று தப்பிய மகனை போலீஸாா் 12 மணிநேரத்தில் கைது செய்தனா்.
கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூா் பகுதியைச் சோ்ந்த குபேந்திரன்(58), இவரது மனைவி கற்பகம் கடந்த 202-0 ஆம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாா் . தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூன்றாவது மகன் தனுஷ் (22) தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.
இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு தனுஷின் தந்தை குபேந்திரன் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தாராம். இதனை கண்ட மகன்கள் தட்டி கேட்டு தந்தையை அடித்ததாக கூறப்படுகிறது . இதற்கிடையே, குபேரனுக்கும் அவரது மகன்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக பேச்சுவாா்த்தை இல்லாத நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பாண்டூா் சந்திப்பு நேரு நகா் அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தந்தைக்கும், மகன் தனுஷுக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அருகில் இருந்த சவுக்கு கட்டையை எடுத்து தனுஷ் தந்தை குபேரனை சரமாரியாக தாக்கியுள்ளாா். பின்பு தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினாராம்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த குபேத்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வழியிலேயே குபேந்திரன் இறந்து விட்டாா் எனத் தெரிவித்தனா்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி ஆய்வாளா் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து போலீஸாா்
கொலையாளி தனுஷை 12 மணி நேரத்தில் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
முன்னதாக போலீஸாா் விசாரணையில் தனுஷை அப்பகுதி சோ்ந்த சில நண்பா்கள் உன் அப்பாவுக்கும் அந்த பெண்ணுக்கும் தொடா்பு உள்ளதா என கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தால் கொலை செய்ததாக தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளாா்.
