2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரில...
தங்கம் வென்றார் அன்னு ராணி!
போலந்தில் நடைபெற்ற 8-ஆவது வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் தொடரில் தனது இரண்டாவது முயற்சியில் 62.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றுள்ளார்.
32 வயதாகும் அன்னு ராணு இந்திய அளவில் அதிக தூரம் ஈட்டி எறிந்ததில் தேசிய சாதனை படைத்த வீராங்கனையாக இருக்கிறார்.
வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் தொடரில் 62.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றதன் மூலம் உலக தடகள கான்டினென்டல் டூர் வெண்கல பிரிவில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தேசிய அளவில் அன்னு ராணி 2022-இல் 63.82 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததே இதுவரை அவரது சிறந்த சாதனையாக இருக்கிறது.
கடந்த ஓராண்டில் தற்போதுதான் அவர் 60 மீட்டருக்கும் அதிகமாக ஈட்டி எறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்முயற்சியில் 60.95 மீட்டருக்கு எறிந்த அன்னு ராணி இரண்டாவது முயற்சியில் 62.59 மீட்டருக்கு எறிந்தார். கடைசியாக 6ஆவது முயற்சியிலும் 60.07 மீட்டர் எறிந்தார்.
அன்னு ராணி 59 மீட்டருக்குக் கூட ஈட்டி எறிய முடியாததால் பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிபெற முடியாமல் தவித்து வந்தார். அதற்கான தகுதிச் சுற்றில் 55.81 மீட்டருக்கு எறிந்திருந்தார்.
டோக்கியோவில் வரும் செப்டம்பரில் நடைபெறும் உலக சாம்பியனுக்கு நேரடியாக போட்டியிட இன்னும் அன்னு ராணி தகுதி பெறவில்லை. ஆனால், உலக தரவரிசையின்படி கலந்துகொள்ள போராடி வருகிறார்.
புவனேஸ்வரில் வரும் ஆக.10ஆம் தேதி நடைபெறும் உலக தடகள கான்டினென்டல் டூர் வெண்கல பிரிவில் அன்னு ராணு கலந்துகொள்கிறார்.