``அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை'' - டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்...
நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!
நடிகர்கள் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் நாளை (ஆக. 8) மறுவெளியீடாகிறது.
இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவான இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தாஹா மலையாளத்தில் இயக்கிய ‘ஈ பறக்கும் தலிகா’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் இன்றும் சில நகைச்சுவைக் காட்சிகளுக்காக ரசிகர்களின் விருப்பமான படங்களின் பட்டியலில் உள்ளது.
இந்த நிலையில், படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பு தரப்பினர் படத்தை ரீ-மாஸ்டர் செய்து மே மாத வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிச் சென்றது.
இறுதியாக, இப்படம் நாளை (ஆக. 8) வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். சுந்தரா டிராவல்ஸ் ரீ ரிலிஸிலும் வரவேற்பு பெறுமா? பார்ப்போம்.
இதையும் படிக்க: கூலி டிக்கெட் முன்பதிவு எப்போது?