World Breast Feeding Week: சீம்பால் முதல் தாய்ப்பால் அருந்துகையில் குழந்தையின் ம...
கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!
பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசின் கூட்டுப் பராமரிப்பில் உள்ளது.
இதை மெட்ரோ நிா்வாகத்துடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, தெற்கு ரயில்வே சாா்பில் மத்திய ரயில்வே வாரியத்துக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி தெற்கு ரயில்வே குழுவின் கூட்டம் கடந்த ஜூலை 31- ஆம் தேதி நடைபெற்றது. இதில் மெட்ரோவுடன் பறக்கும் ரயில் திட்டத்தை இணைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேளச்சேரியில் உள்ள பறநகர் ரயில் பணிமனைக்கான இடம், மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு ஏற்ப மாற்றப்படவுள்ளது. இந்த பணிகள் நிறைவுற்றப் பிறகு பறக்கும் ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோவுடன் பறக்கும் ரயில் திட்டத்தை இணைப்பதன் மூலம் சென்னையில் ரயில் சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து தடையற்ற போக்குவரத்து வசதி ஏற்படும்.
எம்ஆர்டிஎஸ் திட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், அதன் சொத்துகளும் மெட்ரோ நிா்வாகத்தின் கீழ் மாற்றப்படும். ரயில்வே ஊழியா்கள், செயல்பாடுகள், பராமரிப்பு ஆகியவையும் தமிழக அரசுக்கு மாற்ற வழிவகை செய்யப்படும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி எம்ஆர்டிஎஸ் நிறுவனத்தின் கீழ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் முதலீடு அம்சங்கள் மெட்ரோவுக்கு அளிக்கப்படவுள்ளன.
அதேபோல, வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை, வரும் நவம்பரில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணமெடுக்க முடியுமா?