தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் ரஜினிகாந்தை விமானத்தில் சந்தித்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
படத்திற்கான புரமோஷன்களும் ஹைதராபாத், மும்பை என நாட்டின் முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருவதால் முதல்நாள் வணிகமே ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானத்தில் பயணிக்க வந்த ரஜினியைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகமாகினர். அமர்ந்திருந்த ரஜினியைப் பார்த்து ரசிகர் ஒருவர், “தலைவா முகத்தைப் பார்க்கணும்” என்றார்.
Thalaiva unga face paakanum ❤️#Rajinikanth#Superstar#Thalaivar#50YearsOfRAJINISM#Coolie#Jailer2pic.twitter.com/MhdxhvSmI2
— Rajini✰Followers (@RajiniFollowers) August 6, 2025
இதைக்கேட்ட ரஜினி உடனே எழுந்து வணக்கம் வைத்துவிட்டு ரசிகர்களை நோக்கி கைசைத்தார். இச்சம்பவம் ரசிகர்களிடம் உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி