Gangaikonda Cholapuram Temple History | கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உருவான வரலாறு...
ராஜஸ்தான்: திருமணத்தில் மணமகள் மது அருந்துவது ஒரு சடங்கு! சுவாரஸ்ய பின்னணி என்ன?
ராஜஸ்தானில் பண்டைய பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மணமக்கள் வீட்டார் மது அருந்துவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். படிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது அல்லவா? திருமண விழாக்கள் எதற்காக இது போன்ற மணமக்கள் மதுவை அருந்துகிறார்கள் என்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
பியாலா என்று அறியப்படும் இந்த மரபு ராஜ்புத் கலாசாரத்தில் மணமக்கள் பின்பற்றப்படும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.
இது தனித்துவமான மரபில் மணமக்கள் தனது புது வீட்டிற்கு நுழையும்போது அங்கு நாட்டு மது அல்லது விஸ்கி போன்றவை வழங்கப்படுகிறது. அதனை மணமக்கள் அருந்துகின்றனர். கோப்பையைத் தொடுவது, அதற்குத் திலகம் இடுவது இப்பழக்கவழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

சில சமயங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் மணமகளுக்குப் பதிலாக இந்த மரபைப் பின்பற்றுகின்றனர். இந்த மரபு ராஜஸ்தானின் சில பகுதிகளில் மட்டும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
குறிப்பாக உதய்பூர், கோத்பூர், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் குறிப்பாக ராஜ்புத் குடும்பங்களில் இது பொதுவாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இவை எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மது அருந்தும் மரபானது சில இடங்களில் பரிணாமம் அடைந்து, அதற்குப் பதிலாக பழச்சாறு, குளிர்பானங்கள், தேங்காய் நீர், ரோஜா நீர் சர்பத் போன்றவை வழங்குகின்றன.
இந்த மரபின் உண்மையான உணர்வு பேணுவதற்காக இவ்வாறு வழங்குகின்றனர். பியாலா அல்லது மன்வார் என்று அறியப்படும் இந்த மரபு, குடும்பத்தின் செழிப்பு மற்றும் தைரியத்தை அடையாளப்படுத்துவதாகக் கூறப்படுகிறது
ஆரம்பத்தில் மது, வீரம் மற்றும் நட்பின் அடையாளமாக வழங்கப்பட்டிருக்கிறது.