செய்திகள் :

Elon Musk: தனது 3 வயது மகனின் ஓவியத்தை அனிமேஷனாக பகிர்ந்த எலான் மஸ்க் - எப்படித் தெரியுமா?

post image

எலான் மஸ்க்கின் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஷிவோன் ஜிலிஸ், தனது மூன்று வயது மகன் வரைந்த ஓவியத்தை க்ரோக் இமேஜின் (Grok Imagine) கருவியை பயன்படுத்தி ஒரு குறுகிய அனிமேஷன் வீடியோவாக மாற்றியுள்ளார்.

ஸ்ட்ரைடர் என்ற அந்த மூன்று வயது மகன் தனது தந்தை எலான் மஸ்க்காக வரைந்த ஓவியத்தில் ’ஸ்டார்ஷிப்’ என்ற பெயரிடப்பட்டிருந்தது.

அந்த ஓவியத்தில் மஞ்சள் நிற விண்கலன், இளஞ்சிவப்பு நிற செவ்வாய்க் கிரகத்தை நோக்கி பறப்பதாக காட்டப்பட்டிருந்தது. இந்த ஓவியத்தில் ’டூ டாடி’ என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த ஓவியத்தை க்ரோக் இமேஜின் கருவியை பயன்படுத்தி ஒரு குறுகிய அனிமேஷன் வீடியோவாக ஷிவோன் மாற்றி இருக்கிறார். அந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து க்ரோக் இமேஜின் மூலம் உங்கள் குழந்தையின் ஓவியத்தை அனிமேஷன் திரைப்படம் ஆக மாற்ற முடியும் என்று கூறி பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவு வைரலானதையடுத்து, பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் ஓவியங்களை அனிமேஷன் ஆக மாற்றி அதில் பகிர்ந்து வருகின்றனர். குழந்தைகளின் எளிய ஓவியங்கள் நகரும் கதைகளாக மாறும் போது அதனை பலரும் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

க்ரோக் இமேஜின் என்றால் என்ன?

க்ரோக் இமேஜின் என்பது xAI க்ரோக் செயலியில் உள்ள புதிய அம்சம் ஆகும். இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உரையை படங்களாகவும், படங்களை ஒலியுடன் கூடிய குறுகிய வீடியோக்களாகவும் மாற்ற உதவுகிறது.

Health: மெக்னீசியம் கிரீம் தடவினால் தூக்கம் நன்றாக வருமா?!

செல்போனை ஓப்பன் செய்தாலே, 'நைட்ல மெக்னீசியம் கிரீமை உடம்புல தடவிக்கிட்டுப் படுத்தா நல்லா தூக்கம் வரும்' என்கிற ரீல்ஸ் வந்துகொண்டே இருக்கிறது. மெக்னீசியம் கிரீம் என்றால் என்ன; அதன் முக்கியத்துவம்; நன்ம... மேலும் பார்க்க

Top News: `திருப்பூர் SSI கொலை டு இந்தியா மீது 50% வரி போட்ட ட்ரம்ப்' - ஆகஸ்ட் 6 ரவுண்ட்அப்

ஆகஸ்ட் 6 - முக்கிய செய்திகள்!* அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார்.* மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுலாத்தலமாக மாதேரான் மலைப்ப... மேலும் பார்க்க

வியட்நாமில் `ஆப்பிள் மேக்புக்' : மிச்ச பணத்தில் 11 நாட்கள் டூர்; பலே பிளான் போட்ட இந்தியர் - எப்படி?

ஒரு இந்தியர், தனது சாமர்த்தியமான யோசனை மூலம் `ஆப்பிள் மேக்புக்'கை வியட்நாமில் குறைந்த விலையில் வாங்கி, அங்கே பதினொரு நாட்கள் விடுமுறையை அனுபவித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்தியாவில் ஆப்பிள... மேலும் பார்க்க

Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! என்ன வீடியோ அது?

நடிகை தீபிகா படுகோனின் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு விளம்பர வீடியோ, 1.9 பில்லியன் பார்வைகளைப் பெற்று இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக புதிய சாதனை படைத்துள்ளது. ஹில்டன் ஹோட்டல் நிறுவனத்துட... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றம்: `கட்சி செய்தித்தொடர்பாளர் நீதிபதியாக நியமனமா?' - பாஜக சொல்வதென்ன?

மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக்குழு 3 நீதிபதிகளை நியமித்து பரிந்துரை செய்துள்ளது. அஜித் காதேதன்கர், அராதி சாதே, சுஷில் கோடேஷ்வர் ஆகியோர் பெயர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சுப்ரீ... மேலும் பார்க்க

தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?

பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ... மேலும் பார்க்க