செய்திகள் :

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

post image

குவஹாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையம் இந்தாண்டு நவம்பரில் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளைப் புதன்கிழமை இரவு பூட்டானில் இருந்து வந்த ஒரு குழுவுடன் ஹிமந்தா சர்மா மறு ஆய்வு செய்தார். இந்த முனையமானது வரும் நவம்பர் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது. மேலும் இந்த அதிநவீன உள்கட்டமைப்பைத் திறந்துவைக்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்.

கெலேஃபு மைண்ட்ஃபுல் நகரத்தைச் சேர்ந்த பூட்டான் தூதுக் குழுவும் புதிய முனையக் கட்டடத்திற்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தது, இது அண்டை நாட்டுடனான இணைப்பை மேம்படுத்த உதவும்.

இது வடகிழக்கில் இணைப்பை அதிகரிக்கும் மற்றும் நமது அண்டை நாடான பூட்டானுடனான இணைப்பையும் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்

நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கும் முனையத்தில் பறக்கத் தயாராகுங்கள் என்று முதல்வர் எக்ஸ் பதிவில் பதிவிட்டார்.

பாதசாரிகள் பாதுகாப்பான சாலை கடக்க வசதியாக குவஹாத்தியில் உள்ள கானாபரா, ஜலுக்பாரி இடையே ஐந்து கூடுதல் நடைமேம்பாலம் கட்டப்படும் என்றும் சர்மா அறிவித்தார்.

Assam Chief Minister Himanta Biswa Sarma has said that the international terminal of Guwahati airport will be opened to travellers in November this year.

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

இந்தியாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்த சான்றுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டார்.மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

25% தாங்காது! மேலும் 25 சதவிகிதமா? டிரம்ப் வரியால் அடிவாங்கும் ஆடைகள், கடல் உணவுகள்... மேலும் என்னென்ன?

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முன்வராததால், இந்தியாவுக்கு அறிவித்த வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்திய பொருள்க... மேலும் பார்க்க

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்ல... மேலும் பார்க்க

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

இந்தியா மீதான கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது வெளியுறவு கொள்கையின் பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெ... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதியின் எஸ்.வி பிராணதான அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். தொழிலதிபரான சிராக் புருஷோத்தம், வருவாய் அமைச்சர் ஏ. சத்ய பிரசாத் உடன் திருமலை திருப்பதி தேவஸ்... மேலும் பார்க்க