செய்திகள் :

ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? வைரலான கஜோல்!

post image

ஹிந்தியா, மராத்தியா என்கிற சர்ச்சைக்கு நடுவே ஹிந்தியில் பேச மறுத்துள்ளார் நடிகை கஜோல்.

நடிகை கஜோல் பாலிவுட்டின் முன்னனி நாயகியாக இருந்தவர். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழில் நடிகர் பிரபு தேவாவுடன் மின்சாரக் கனவு படத்தில் நடித்திருந்தார்.

பின், நீண்ட காலம் கழித்து நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி - 2 திரைப்படத்தில் வில்லியாக நடித்து கவனம் பெற்றார்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை கஜோல், மராத்தியிலும் ஆங்கிலத்திலும் பதிலளித்து வந்தார். அப்போது, செய்தியாளர், ‘ஹிந்தியில் பேசுங்கள்’ என்றார்.

அதற்கு கஜோல், “ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் போதும்” எனக் கோவமாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்கு இடையே நிகழும் சர்ச்சையால் கஜோலின் இப்பதில் காரசார விவாதமாக மாறியுள்ளது.

முக்கியமாக, ஹிந்தியில் பேச முடியாவிட்டால் நீங்கள் ஏன் ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்கிறீர்கள் எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

actor kajol refuses to spoke in Hindi amid of hindi vs marathi issue

தெலுங்கு திரையுலகில் யோகி பாபு! நடிகர் பிரம்மானந்தமுடன் கைகோக்கிறார்!

நடிகர் யோகி பாபு, பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் புதிய திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகின்றார். தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. சூப்பர் ஸ்... மேலும் பார்க்க

ஒசாகா வரலாற்றுச் சாதனை..! இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனையுடன் மோதல்!

கனடியன் ஓபனில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டியான கனடியன் ஓபனில் அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும்... மேலும் பார்க்க

டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் கலையரசன் நடிப்பில் வெளியான டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ராஸ் படத்தில் அன்பு என்ற பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமான கலையரசன், குறிப்பிடத்தக்... மேலும் பார்க்க

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் ரஜினிகாந்தை விமானத்தில் சந்தித்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.பான் இந்திய பிரபலங்கள் நடித்... மேலும் பார்க்க

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

நட்பு ரீதியான போட்டியில் ரியல் பெடிஸ், கோமா 1907 கால்பந்து அணி வீரர்கள் மோதிக்கொண்டது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ஸ்பெயினில் நேற்று நடந்த போட்டியில் ரியல் பெடிஸ், கோமா கால்பந்து அணிகள் விளைய... மேலும் பார்க்க

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

நடிகை ஊர்வசி இயக்குநர் பாக்கியராஜ் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுகான தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71-வது தேசிய விருதுக... மேலும் பார்க்க