எல்லா கஷ்டங்களுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு பிரம்மஹத்தி பரிகார ஹோமம்; ஒரு மண்டலத்...
இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி
நடிகை ஊர்வசி இயக்குநர் பாக்கியராஜ் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுகான தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில், உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால், சிறந்த நடிகர் என ஷாருக்கான் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்? அதற்கான அளவுகோல்கள் என்ன? என தேசிய விருதுக் குழுவைக் கடுமையாகக் கண்டித்து பேசினார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஊர்வசி தன் திரைப்பயணம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.
அதில், “முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நான் மிக மெலிதாக இருப்பேன். அப்படத்தில் விருப்பமே இல்லாமல்தான் நடித்தேன். பாக்கியராஜ் அவரே சேலை கட்டி எப்படி நடக்க வேண்டுமென நடந்து காட்டுவார். ஒவ்வொரு காட்சிகளிலும் எப்படியெல்லாம் சிரிக்க, அழுக வேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்தது அவர்தான். எனக்காக நிறைய முயற்சிகளை எடுத்தார். முக்கியமாக, என் பெயரைத் திரையில் போடும்போது, “என்றும் உங்கள் ஆதரவை நாடும் ஊர்வசி” என்றுதான் போட்டார்.
யார் இதையெல்லாம் செய்வார்கள்? வேறு யாராவதாக இருந்தால் நான் செய்த சேட்டைகளுக்கும் உதாசீனங்களுக்கும் 4 நாள்களில் என்னை விரட்டியடித்திருப்பார்கள். ஆனால், பாக்கியராஜ்தான் எனக்கான இடத்தைக் கொடுத்தார். அதனால், இன்றும் நான் மேக்கப் போடுவதற்கு முன் அவரை நினைத்துக் கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!