செய்திகள் :

ரெட்ட தல டீசர்!

post image

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கிய இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிட்டுள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய், இப்படத்தில் இரட்டை வேடத்தில் 4 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். கோவாவில் நிகழ்வது போன்ற ஆக்சன் காட்சிகள், அருண் விஜய்யின் இரட்டைத் தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

actor arun vijay's retta thala movie teaser out now

மெஸ்ஸிக்கு நிகரான ஊதியம்... எம்எல்எஸ் தொடரில் இணைந்த தென் கொரிய வீரர்!

அமெரிக்காவின் பிரபல கால் பந்து தொடரான எம்எல்எஸ் தொடரில் தென் கொரிய வீரர் சன் லாஸ் ஏஞ்சலீஸ் அணியில் இணைந்தார்.தென்கொரியாவைச் சேர்ந்த சன் (33 வயது) தன்னுடைய 23ஆவது வயதில் வடக்கு லண்டனுக்கு குடிபெயர்ந்தா... மேலும் பார்க்க

கூலி படம் குறித்த வதந்தி! ஆமிர் கானின் நிறுவனம் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் “கூலி” திரைப்படம் குறித்த வதந்திகளுக்கு, நடிகர் ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூட்டணியில் உரு... மேலும் பார்க்க

சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!

சின்ன திரை வரலாற்றில் முதல்முறையாக, மூன்று தொடர்களின் காட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.வெள்ளித் திரைக்கு இணையாக சின்ன திரை தொடர்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று... மேலும் பார்க்க

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

நடிகர் மம்மூட்டி திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்கிற மம்மூட்டிக்கு சிறுவயதில் இருந்தேநாடங்களில் நடித்த பயிற்சி இருந்ததால் தன்னுடைய முதல் படத்தில் ... மேலும் பார்க்க

லீக்ஸ் கோப்பை: மெஸ்ஸி இல்லாமல் காலிறுதிக்கு முன்னேறிய இன்டர் மியாமி!

லீக்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. எம்எல்எஸ் தொடரில் விளையாடும்போது மெஸ்ஸிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், லீக்ஸ் கோப்பையில் இ... மேலும் பார்க்க

தெலுங்கு திரையுலகில் யோகி பாபு! நடிகர் பிரம்மானந்தமுடன் கைகோக்கிறார்!

நடிகர் யோகி பாபு, பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் புதிய திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகின்றார். தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. சூப்பர் ஸ்... மேலும் பார்க்க