செய்திகள் :

கமல் ஹாசன்: "கீழடி முன்னெடுப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - மோடியை சந்தித்த கமல்!

post image

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள கமல் ஹாசன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து பிரசாரம் மேற்கொண்டார். திமுக ஆதரவுடன் கடந்த ஜூலை 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

பிரதமரைச் சந்தித்த கமல்
பிரதமரைச் சந்தித்த கமல்

மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்தித்த கமல் ஹாசன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறியிருக்கிறார். முக்கியமாக கீழடி குறித்து பேசியதாகக் கூறியுள்ளார்.

கமல் ஹாசன் பதிவு:

இது குறித்த அவரது சமூக வலைத்தள பதிவில், "மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.

தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்." எனக் கூறியிருக்கிறார்.

கமல் ஹாசன் - நரேந்திர மோடி

மேலும் கீழடியைக் குறிப்பிடும் வகையிலான நினைவு பட்டயம் ஒன்றையும் பிரதமருக்கு பரிசளித்துள்ளார் கமல் ஹாசன்.

ரஷ்யா உடன் வர்த்தகம்: நெருக்கும் ட்ரம்ப் - முக்கியத்துவம் பெறும் புதினின் இந்திய வருகை!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை தருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். புதினின் வருகை குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. அஜித் தோவல... மேலும் பார்க்க

US Tariff: ரஷ்யாவுடன் வர்த்தகம் - இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? - ட்ரம்ப் பதில்!

அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பை எதிர்கொள்ளும் நாடாக மாறியிருக்கிறது இந்தியா. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப... மேலும் பார்க்க

'நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்தது இப்படித்தான்' - ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் | முழு விபரம்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முதல் பீகாரில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சூழலில் அவசர அவசரமாக ஒரே மாதத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்... மேலும் பார்க்க

"இதற்கும் காங்கிரஸை குற்றம்சாட்ட முடியாது" - ட்ரம்ப் வரி குறித்து மல்லிகார்ஜுன கார்கே காட்டம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரியை இரட்டிப்பாக்கி நேற்று இந்தியாவிற்கு 50 சதவிகித வரியை அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் மோடியைச் சாடியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது... மேலும் பார்க்க

PMK: "என் எதிரிகளை விட அசிங்கமான வேலையைச் செய்கிறார்" - அன்புமணியுடனான பிரச்னையை விவரிக்கும் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகம் விவகாரத்தில் பல மாதங்களாக மோதல் நிலவிவருகிறது.இத்தகைய சூழலில் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஐயா என்று அழைத்த... மேலும் பார்க்க

'மோதிக்கொள்ளும் இலைக் கட்சிப் புள்ளிகள்!' டு 'இனிஷியல் தலைவருக்கு வந்த கவலை' | கழுகார்

மோதிக்கொள்ளும் இலைக் கட்சிப் புள்ளிகள்!கோஷ்டிப்பூசலில் 'மேடான' தொகுதி...மான்செஸ்டர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலைக் கட்சி வாகைசூடிய ஒரு தொகுதி இருக்கிறது. அந்தத் தொகுதியில் மூன... மேலும் பார்க்க