செய்திகள் :

'மோதிக்கொள்ளும் இலைக் கட்சிப் புள்ளிகள்!' டு 'இனிஷியல் தலைவருக்கு வந்த கவலை' | கழுகார்

post image

மான்செஸ்டர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலைக் கட்சி வாகைசூடிய ஒரு தொகுதி இருக்கிறது. அந்தத் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சின்னவர், இந்த முறை கண்டிப்பாக சீட் பெறும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறாராம். அதனால், சிட்டிங் எம்.எல்.ஏ-வான செல்வமானவர், தொகுதியைத் தக்கவைக்கக் கடுமையாகப் போராடவேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறதாம்.

இருவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இந்தப் போட்டியால், கட்சி நிர்வாகிகளிடம் ஒருவரை ஒருவர் கடுமையாகப் புறம் பேசிவருகிறார்களாம். காதுகள் தீயும் அளவுக்குப் பேச்சு ஓவராகியிருப்பதால், இருவர்மீதும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள் இலைக் கட்சி நிர்வாகிகள். இதற்கிடையே, இலைக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பூசலை, தங்களுக்குச் சாதகமாக்க, சூரியக் கட்சிப் புள்ளிகளும் தீயாகக் களமிறங்கிருப்பதால், மேடான அந்தத் தொகுதியின் அரசியல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது!

கடைக்கோடி மாவட்டத்தில், 'சுதந்திர' கட்சியின் மாவட்டப் பிரமுகரால் ஆளும் தரப்புக்குப் பெரும் தலைவலி உருவாகியிருக்கிறதாம். ஆளும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், காட்டமான அறிக்கையை வெளியிட்டு, கூட்டணிக்குள் கடுமையான உஷ்ணத்தை ஏற்படுத்துகிறாராம் அந்த மாவட்டப் பிரமுகர். அவரின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், 'கூட்டணிக் கட்சியின் ஆட்சியின் மீது இப்படியா சேற்றை வாரி இறைப்பது?' எனக் கொதிக்கிறார்கள் ஆளும் தரப்பு மாவட்ட நிர்வாகிகள்.

அவரின் இந்தக் கறார் அரசியல், உள்ளூர் மாண்புமிகுவுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்திருக்கிறதாம். எத்தனையோ முறை நேரடியாகச் சொல்லியும் பயனில்லாததால், 'சுதந்திர' கட்சியின் தலைவரிடம் தோழமைச் சுட்டல் செய்யும்படி, கட்சி மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம் அந்த மாண்புமிகு!

தேனியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், ஆண்டிபட்டி தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜனும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனும் பொதுவெளியில் மோதிக்கொண்டது, அந்த மாவட்டத்திலுள்ள கோஷ்டிப்பூசலை வெட்ட வெளிச்சமாக்கியது. 'அ.தி.மு.க., அ.ம.மு.க எனப் பல கட்சிகள் தாவி, தி.மு.க-வில் ஐக்கியமான தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்ததை, உள்ளூர் நிர்வாகிகள் யாருமே ரசிக்கவில்லை.

தற்போது எம்.பி-யான அவர், ஆண்டிபட்டி தொகுதியைத் தனது வாரிசுக்காகக் குறிவைக்கிறார். அதை சிட்டிங் எம்.எல்.ஏ-வான மகாராஜன் துளியும் விரும்பவில்லை. அதன் விளைவுதான், அரசு விழா மேடையில் எதிரொலித்திருக்கிறது. இனியும் மேலிடம் தலையிட்டுப் பிரச்னையைப் பேசிச் சரிசெய்யவில்லையென்றால், கோஷ்டிப்பூசல் உக்கிரமான போராக மாறும்' என அச்சப்படுகிறார்கள் உடன்பிறப்புகள்!

ராயப்பேட்டையின் இனிஷியல் கட்சித் தலைவர், 'டெல்லி நம்மை பயன்படுத்திக்கவும் மாட்டேங்குது. மரியாதையும் இல்லை...' என ஏகவருத்தத்தில் உழல்கிறாராம். 'நான் தேர்தலில் போட்டியிடவில்லை. என் ஆட்களை நிறுத்துகிறேன். அதற்காவது எடக்கானவர் சம்மதிப்பாரா எனக் கேட்டுச் சொல்லுங்கள்...' என டெல்லி தலைவர்களிடம் இனிஷியல் தலைவர் சொல்லி, பல மாதங்கள் கடந்துவிட்டனவாம்.

இதற்கிடையே, `இனிஷியல் தலைவரைக் கூட்டணியில் சேர்ப்பீர்களா?’ என்றதற்கு 'காலம்தான் பதில் சொல்லும்' என்றிருந்தார் எடக்கானவர். இதைத் தனக்கு கிரீன் சிக்னலாகக் கருதிய இனிஷியல் தலைவருக்கு, இன்றுவரையில் எந்தத் தரப்பிலிருந்தும், எந்தப் பதிலும் இல்லை. அந்தக் கடுப்பில்தான், 'முதல்வர் வேட்பாளர் யாரென்பதை டெல்லிதான் முடிவுசெய்யும்...' எனக் குண்டை எறிந்திருக்கிறாராம் அவர். 'பணிவானவரைக் கழற்றிவிட்டதைப்போல, தன்னையும் கடைசி நேரத்தில் கழற்றி விட்டுவிடுவார்களோ என்ற கவலை அண்ணனுக்கு வந்துவிட்டது. அதனால்தான், மாற்று ஏற்பாடாக பனையூர் கட்சிப்பக்கம் துண்டை விரிக்க ஆலோசனை செய்துவருகிறார்' என்கிறார்கள் அவருடன் பயணிப்பவர்கள்!

இலைக் கட்சியின் மாஜி மன்னர் புள்ளியை, சென்னைக்கு அழைத்துவந்து, சூரியக் கட்சித் தலைமையின் முன்னிலையில், கட்சியில் இணைத்தது முத்துப் பிரமுகர்தான். இந்தத் தகவல், மாவட்ட மாண்புமிகுவான 'கண்ணானவருக்கு’ கடைசியில்தான் சொல்லப்பட்டதாம். அதில் கடுப்பான மாண்புமிகு, தன் வழக்கமான அரசியலைக் கையிலெடுத்துவிட்டாராம். அதாவது, தற்போது புதிதாகக் கட்சிக்குள் வந்திருக்கும் மாஜி மன்னர் புள்ளியும், 'கண்ணானவரும்’ பழையை நண்பர்களாம்.

அந்தப் பழைய பாசத்தில், 'முத்துப் பிரமுகரின் சொந்தத் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால், கட்டாயம் வெற்றி உங்களுக்குத்தான். நானும் உங்களுக்காகத் தலைமையிடம் பேசுகிறேன்...' என மன்னர் புள்ளியை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருக்கிறார். அந்தக் குஷியில், முத்துப் பிரமுகரின் தொகுதியில் வேலையைத் தொடங்கியிருக்கிறார் மன்னர் புள்ளி. 'நாம்தானே கட்சியில் சேர்த்தோம்... நமக்கெதிராகவே வேலை பார்க்கிறாரே...' என முத்துப் பிரமுகர் கடுப்பாகியிருக்கும் நிலையில், 'நீங்க மாவட்டம்... உங்க சீட்டை எப்படி அவருக்குக் கொடுப்பாங்க... வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க...' என்று அட்வைஸ் செய்திருக்கிறார்களாம் உடனிருப்பவர்கள். ஆனாலும், டென்ஷன் குறையாமல்தான் இருக்கிறாராம் முத்துப் பிரமுகர். அதைப் பார்த்து ஏக சந்தோஷத்தில் இருக்கிறாராம் கண்ணானவர்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

PMK: "என் எதிரிகளை விட அசிங்கமான வேலையைச் செய்கிறார்" - அன்புமணியுடனான பிரச்னையை விவரிக்கும் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகம் விவகாரத்தில் பல மாதங்களாக மோதல் நிலவிவருகிறது.இத்தகைய சூழலில் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஐயா என்று அழைத்த... மேலும் பார்க்க

``பெரிய தொகை தான்; ஆனாலும், விவசாய நலன் காக்க கட்டத் தயார்'' - ட்ரம்ப் வரி குறித்து பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளார். இது இந்திய ஏற்றுமதிகளைப் பெரியளவில் பாதிக்கும். இப்படி பாதிக்கப்படும் துறைகளில் ஜவுளித்துறை, விவசாயத்துறை, எலக்ட்ரானிக்ஸ் துறைகளும... மேலும் பார்க்க

DMK: கலைஞரின் 7-வது நினைவுநாள்; மலர் தூவி அஞ்­சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்! |Photo Album

"Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!" - கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3K... மேலும் பார்க்க

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபுணர் விளக்கம்

நேற்று இந்தியா மீதான வரியை இரட்டிப்பாக்கி அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதாவது, இந்தியா மீதான வரி 50 சதவிகிதம் என அமலுக்கு வர இருக்கிறது. ட்ரம்பின் வரி குறித்து விளக்குகிறார் பங்குச்சந்தை ந... மேலும் பார்க்க