செய்திகள் :

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 3,500 செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.268/2025

பணி: Nursing Officer

காலியிடங்கள்: 3,500

சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800

வயதுவரம்பு: 11.8.2025 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா ரூ.10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பொது நர்சிங் மற்றும் செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்து இந்திய நர்சிங் கவுன்சில் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருப்பவர்கள் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எய்ம்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் நர்சிங், பொது அறிவு, பொது ஆங்கிலம், பொது கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வுக்கான நாள், இடங்கள் குறித்த விவரம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வுக்கான நுழைவுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.2,400, இதர அனைத்து பிரிவினர் ரூ.3000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

Online Application is invited for the Nursing Officer Recruitment Common Eligibility Test

ஆரம்ப சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாகவுள்ள பாராமெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Staff Nurseகாலியிடங்கள்: 93சம்பளம்: மாதம் ரூ.18,000தகுதி : நர்சிங் பிரிவி... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

மைசூரில் செயல்பட்டு டிஆர்டிஓ-இன் தற்காப்பு உயிரியல் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மாலுமி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்... மேலும் பார்க்க

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

சேலம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இது பற்றிய ... மேலும் பார்க்க

பெண்கள் சேவை மையத்தில் சமூகப் பணியாளர், ஐடி உதவியாளர் வேலை!

மத்திய அரசால் முன்மொழியப்பட்ட சிறப்பு திட்டமான சகி(SAKHI) என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து... மேலும் பார்க்க

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 230 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள... மேலும் பார்க்க