செய்திகள் :

25% தாங்காது! மேலும் 25 சதவிகிதமா? டிரம்ப் வரியால் அடிவாங்கும் ஆடைகள், கடல் உணவுகள்... மேலும் என்னென்ன?

post image

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முன்வராததால், இந்தியாவுக்கு அறிவித்த வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

ஆனால், இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்ட பிறகு, ஜான் ஏறினாலும், முழம் ஏறினாலும் என்ன? 25 சதவீதத்தைத் தொட்டுவிட்டாலே வணிகம் கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலையில், 50 சதவீதம் என்ன, 1000 அல்லது 5000 சதவீதம் கூட ஏற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள் ஏற்றுமதித் துறை நிபுணர்கள்.

இந்த வரி விதிப்பினால், அமெரிக்காவில் விற்பனையாகும் இந்திய பொருள்கள் கடும் விலையேற்றத்தை சந்திக்கும். விலையேற்றம் காரணமாக, இந்திய பொருள்களின் விற்பனை குறைந்து, விரைவில் விற்பனையே நடக்காமல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் நேரிடும். இதனால், பிற நாடுகளுடனான வணிகப் போட்டியில் இந்தியா பின்தங்க வேண்டியதுதான்.

ஏற்கனவே, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கும் கிறிஸ்துமஸ் தினத்துக்கான பொருள்கள், இந்த வரி விதிப்பு நடைமுறையால் ஆங்காங்கே தேங்கியிருப்பதாகவும், இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களும், வணிக ஏற்றுமதியாளர்களும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடை ஏற்றுமதி பாதித்தால், இந்தியாவில் நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களை அது பாதிக்கும் எனக கூறப்படுகிறது.

டிரம்ப் அதிரடிகளால் செல்போன் தயாரிப்புகளுடன் சேர்த்து, ஐ.டி. துறைகளில் ஏற்கனவே ஏதோ ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இப்போது செய்யறிவும் சேர்ந்துகொண்டிருப்பதால் இதுவரை கோலோச்சி வந்த மென்பொருள் துறையும் சரிவடையத் தொடங்கியிருக்கிறது. இது அல்லாமல் தமிழ்நாட்டின் ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காலணிகள் ஏற்றுமதியில் பெரும் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அஞ்சுகிறார்கள்.

அமெரிக்கா அறிவித்த 25 சதவீத வரி இன்று முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த வரி நடைமுறைக்கு வருவதற்கு 14 மணி நேரத்துக்கு முன்பு இரு மடங்கு வரி விதிப்புக்கான கோப்பில் டிரம்ப் கையெழுத்து இட்டுள்ளார். இது அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வரும்.

ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையே தொடர்ந்து இழுபறியில் உள்ள வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஒருவேளை இரு தரப்புக்கும் பாதகமின்றி ஒப்புதல் ஏற்பட்டால், இந்த வரி விதிப்புகள் திரும்பப் பெறப்படுமா? தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் தப்புமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் போகும் போக்கைப் பார்த்தால் அவ்வாறு நிலை மாறுவதாகத் தெரியவில்லை.

இந்த வரி விதிப்பால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரு.7.5 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா மேற்கொள்ளும் ஏற்றுமதியும், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 40 முதல் 50 சதவீதம் அளவுக்குக் குறையும் என்று உலகளாவிய வர்த்தக ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

அதே வேளையில், ரஷியாவிடமிருந்து ரூ.6.26 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் சீனாவைக் காட்டிலும் ரூ.4.6 லட்சம் கோடி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு மட்டும் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. காரணம், சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள்தான்.

அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பினால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள், விலை உயர்ந்த நவரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் தோல் தொழிற்சாலைப் பொருள்கள், கடல் உணவு ஏற்றுமதி, மருந்துத் துறை, வாகன உதிரி பாகங்கள், சிறு, குறு நிறுவனத் துறை வெகுவாகப் பாதிக்கப்படும். ஏற்கனவே, மிகக் குறைந்த லாபத்தில் இவை தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், 50 சதவீத வரி என்பது ஏற்றுமதியை எட்டாக் கனியாக மாற்றியிருக்கிறது.

இந்தியாவின் மிக முக்கிய துறைகளின் ஒட்டுமெத்த உலகளாவிய ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு மட்டும் 30 - 40 சதவீதம் மேற்கொள்ளப்படுகிறது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கிறது. ஆனால், மத்திய அரசோ, அமெரிக்காவிலிருந்து வரும் வேளாண் பொருள்களான மக்காச்சோளம், சோயாபீன்ஸ் போன்றவற்றுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாகவும், அவ்வாறு செய்தால், இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதனை ஏற்க இந்தியா மறுத்து வருவதாகவும், இதே நிலைப்பாடுதான் பால் பொருள்களுக்கான வரி விதிப்பிலும் இருப்பதாகவும், இந்திய விவசாயிகளின் நலனைக் காக்க, அமெரிக்காவின் எதிர்மறை நடவடிக்கைகளை சந்திக்கத் தயார் என்றும் கூறியிருக்கிறது.

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் மற்றொரு தடைக்கல்லாக, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளன. எத்தனால் மற்றும் சோயா எண்ணெயாக பதப்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தை சான்றிதழ் அளித்து ஏற்றுமதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிற்குள் அமெரிக்காவின் அனைத்துப் பொருள்களையும், சந்தைக்குள் அனுமதிக்க மத்திய அரசு சில வரி குறைப்புகளை பரிந்துரைத்திருந்தாலும், டிரம்ப் ஒப்பந்தங்களை மேற்கொண்ட மற்ற அனைத்து நாடுகளுக்கும் 0%-20% கூடுதல் வரிகளை விதிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட ஒப்பந்தங்களில் எந்த மாற்றமும் செய்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், மிக வேகமாக வளர்ந்துவரும் இந்திய சந்தையில், அமெரிக்க பொருள்களை சந்தைப்படுத்த சில வரிகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு பரிந்துரைத்து, அதேவேளையில், ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய், உரம் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களைக் குறைத்துக் கொள்ள முன்வந்தாலும், அமெரிக்க அரசு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் என்ன நடக்கலாம்?

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பினால், இந்தியாவில் பல்வேறு முக்கிய துறைகள் பாதிக்கப்படும்போது, நாட்டில் உள்நாட்டுப் பொருள்களை மட்டும் பயன்படுத்துவோம் என்ற பிரசாரம் ஓங்கி ஒலிக்கலாம்.

அமெரிக்க நிறுவனங்களின் மீது முதலீடுகள் சரி்லாம், அமெரிக்க பிராண்டுகளை விற்பனை அல்லது தயாரிக்கும் நிறுவனங்கள் சரிவை சந்திக்கலாம். எனவே, பெப்சி, கேஎஃப்சி, பிட்சா ஹட் போன்ற அமெரிக்காவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகமான அளவில் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதன் விலைகள் அமெரிக்காவில் கடுமையாக அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

US President Trump has announced that he will increase the tariff on India from 25 percent to 50 percent for not stopping buying crude oil from Russia.

இதையும் படிக்க.. டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணமெடுக்க முடியுமா?

பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்க... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

இந்தியாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்த சான்றுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டார்.மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

குவஹாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையம் இந்தாண்டு நவம்பரில் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளைப் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்ல... மேலும் பார்க்க