செய்திகள் :

World Breast Feeding Week: சீம்பால் முதல் தாய்ப்பால் அருந்துகையில் குழந்தையின் மூக்கு பொசிஷன் வரை!

post image

தாய்மை அடைந்திருக்கும் அம்மாக்களுக்கும், தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களுக்கும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மீனா பிரகாஷ், குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு மற்றும் பிரசவகால, தாய்ப்பால் அறிவுரையாளர் நீலா சிவக்குமார் சில வழிகாட்டுதல்களை இங்கே பகிர்கிறார்கள்.

தாய்ப்பால் I சித்திரிப்பு படம்

தாயிடமிருந்து சுரக்கும் சீம்பால் குழந்தைக்கான அமிர்தமாகும். அது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. முதலில் சிறிதளவே சுரக்கக்கூடிய சீம்பால்தான் குழந்தைக்கான அமிர்தமாகும். சீம்பால் சிறிதளவே சுரந்தாலும் குழந்தைக்குப் போதுமானதாகவே இருக்கும். அதைவிடுத்து, சீனித் தண்ணீர், தேன், கழுதைப்பால் போன்றவற்றைக் கொடுப்பது நல்லதல்ல. பால் புகட்டும்போது தாய் நேராக உட்கார்ந்து, நிமிர்ந்த நிலையில் பால் கொடுப்பதுதான் சிறந்தது.

பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது தாய்ப்பால்தான். பாப்பாவுக்குச் சர்க்கரை, புரதம், கொழுப்பு எனத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்க, தாய்ப்பால் மட்டும்தான் சரியான வழி. உங்கள் குட்டிப் பாப்பா திருப்தியாகத் தாய்ப்பால் குடிக்கிறது என்றால், நோ பிராப்ளம். பொதுவாக, நிறை மாதத்தில் பிறந்த குழந்தை நாளொன்றுக்குக் குறைந்தது மூன்று, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை அம்மாவிடம் பால் அருந்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தையென்றால், இந்த இடைவேளை இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை எனச் சற்று குறையும். தாய்ப்பால் குடிக்கக் குடிக்க சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது என்று குழந்தையின் எல்லா சிஸ்டமும் சரியாக இயங்க ஆரம்பிக்கும்.

தாய்ப்பால் (breastfeed)

`நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள். ஆனால், வயிறு முட்டப் பால் குடித்தால் குட்டிப் பாப்பா தளும்பும்; குடித்த பாலில் கொஞ்சம் கக்கவும் செய்யும். இது நார்மலான விஷயம். குடித்த தாய்ப்பாலானது ஜீரணித்துத் தயிர்போல சிறிதளவு வெளியேறினால் `ஓ.கே'. ஆனால், தாய்ப்பாலைச் செரிக்க முடியாமல், அதை அப்படியே குழந்தை வாந்தி எடுத்தால் உடனே கவனிக்க வேண்டும்.

குடல் ஒன்றுடன் ஒன்று சுற்றிக்கொள்வது, குழந்தையின் குடலானது முழுவதும் வளராமல் இருப்பது, குடலில் அடைப்பு இருப்பது என இந்த மூன்றில் ஒரு பிரச்னை இருந்தால்தான் குழந்தை குடித்த பாலை அப்படியே வாந்தி எடுக்கும். வாந்தியானது பச்சை நிறத்திலோ அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலோ இருந்தால், அது ஆபத்தின் அறிகுறி. ஆனால், கொஞ்ச நேரம் முன்னால் குடித்த வைட்டமின் டிராப்ஸுடன் கலந்து தாய்ப்பால் மஞ்சள் நிறத்தில் வாந்தியாக வருவதற்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.

குழந்தையின் ஆறு மாதங்கள் வரைக்கும் அதற்குத் தாய்ப்பாலைத் தவிர்த்து பவுடர் பால், பசும்பால் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது. சிலர் கழுதைப்பால்கூட ஒன்றிரண்டு டீஸ்பூன் தருகிறார்கள். இதெல்லாம் கூடவே கூடாது. கழுதையின் ஆரோக்கியம், பாலைக் கறக்கிறவர்களின் கை சுத்தம் என்று, இதில் பிறந்த சிசுவுக்கு எதிரான பல ஆபத்துகள் இருக்கின்றன.

கழுதைப்பால்

ஒருவேளை அம்மாவுக்குப் பால் சுரப்புக் குறைவாக இருந்தால், கசகசாவை ஊறவைத்து அரைத்துப் பாலில் கலந்து குடிக்கலாம். இதைத் தவிர நட்ஸ், சுறா மீன், பூண்டு, முருங்கைக்கீரை, பால், முளைக்கட்டிய பயறுகள் ஆகிய உணவுகளைச் சாப்பிடலாம். இயற்கையாகவே பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள் இவை.

தாய், பாலூட்டுவதற்கு முன்னால் ஒரு பெரிய டம்ளர் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். பால் சுரப்புக்கும், பாலூட்டுகிற அம்மாக்களுக்கு உடம்பில் இருக்கிற நீர்ச்சத்து குறைந்து சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்கும் இப்படித் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

பசும்பாலோ அல்லது பவுடர் பாலோ குடிக்கிற குழந்தைகளுக்குப் பால் ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, சருமம் சிவந்து போதல் அல்லது தடித்துப் போதல், அரிப்பு, தும்மல், சுவாசக்கோளாறு, ஆசனவாய் சிவந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். ஆனால், தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. சில குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்காகத் தாய்ப்பால் ஏற்றுக்கொள்ளாமல் இப்படி நிகழலாம். இது, குழந்தை பிறந்த முதல் வாரத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

பசும்பால் புரதத்தால் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வாமை

ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் ஏற்றுக் கொள்ளாமல் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், தாய்ப்பாலில் பசும்பால் இருப்பதுதான் காரணம். பாலூட்டுகிற அம்மா பால் குடிப்பதாலும், காபி, டீ, பனீர், பிஸ்கட், பிரெட் என்று பசும்பால் சார்ந்த பொருள்களை அதிகம் எடுத்துக்கொள்வதாலும், அம்மாவின் தாய்ப்பாலில் பசுவின் புரதமும் கலந்து குழந்தைக்குப் போய்ச் சேர்ந்துவிடும். குறிப்பிட்ட குழந்தைக்குப் பசும்பால் ஒவ்வாமை பிரச்னை இருக்கும்பட்சத்தில், அதன் அறிகுறிகள் குழந்தையிடம் தெரிய ஆரம்பித்து விடும். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சையே குழந்தையின் அம்மா, பால் சம்பந்தப்பட்ட அத்தனை உணவுப் பொருள்களையும் தவிர்ப்பதுதான்.

பாப்பாவுக்குப் பசும்பால் ஒவ்வாமை ஏற்பட்டுக் குறைந்தது 3 மாதம் முதல் 6 மாதம் கழித்துப் பசும்பால் அல்லது பாக்கெட் பாலைத் தாய் குடித்துவிட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து, இன்னமும் பாப்பாவுக்குப் பசும்பால் ஒவ்வாமை இருக்கிறதா என்று செக் செய்து பார்க்கலாம். ஏற்றுக் கொண்டால் சரி. இல்லையென்றால், பாலைத் தவிர்த்துவிட்டு அரிசி, காய்கறிகள், பழங்கள், கேழ்வரகு, முளைகட்டிய தானியங்கள் என்று சத்தான உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பசும்பால் ஒவ்வாமை ஒரு தடவை வந்தால், அது வாழ்நாள் முழுவதும் தொடருமா என்பதைக் கண்டறிய முடியாது.

நிறைய பெண்கள் தங்களிடம் இருந்து சுரக்கும் பால் தங்களின் குழந்தைகளுக்குப் போதுமானதாக இல்லையோ என்ற பதற்றத்திலேயே இருப்பார்கள். பால் பற்றாக்குறையால்தான் குழந்தை அழுகிறது என எண்ணி தங்களையும் மன அழுத்தத்துக்குக் கொண்டு செல்வார்கள். குழந்தைகள் எல்லா நேரத்திலும் பால் பற்றாக்குறையால் மட்டும் அழுவதில்லை. தாயின் அரவணைப்பு தேவைப்படும் நேரங்களையும் குழந்தைகள் அழுகையாத்தான் வெளிப்படுத்துவார்கள். எனவே, பால் சுரப்பு பற்றி யோசித்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். பிறந்த மூன்று மாதம் வரை குழந்தைகளுக்குத் தினமும் 750 மில்லிகிராம் பால் போதுமானதாக இருக்கும். மூன்று மாதம் வரை தினமும் குழந்தை ஆறுமுறை சிறுநீர் கழித்து இரண்டு முறை மலம் கழித்தாலே உங்களுடைய பால் குழந்தைக்குப் போதுமானதாக இருக்கிறது என்றே அர்த்தம்.

காய்ச்சல்

அதற்கு எந்த அவசியமும் இல்லை. உங்கள் உடல் நிலையை சரிப்படுத்த வழக்கம்போல் மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் ரத்தத்தில் கலந்து குழந்தைக்கு ஆன்டிபயாடிக்காகச் செயல்படும்.

ஒரு குழந்தைக்கு பாலூட்டும்போதே தாய்மார்கள் கர்ப்பம் தரித்துவிட்டால் உடனே குழந்தைக்கு பால் ஊட்டுவதை நிறைய பெண்கள் நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. சத்தான உணவுகள் எடுத்துக்கொண்டால் கர்ப்பம் தரித்த பின்பும்கூட முதல் குழந்தைக்கு பாலூட்டலாம்.

சித்திரிப்புப் படம்

உங்களுக்கு பால்சுரப்பு இல்லை என்றாலோ, அதிகமான பால் சுரப்பு இருக்கிறது என்றாலோ அருகில் இருக்கும் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை அணுகி குழந்தையின் ஆரோக்கியத்துக்குத் துணை நிற்பது அவசியம். தாய்ப்பால் சேமிப்பு வங்கியில் இருந்து பாலைப் பெறுவதற்கு எந்தத் தயக்கமும் கொள்ளாதீர்கள், உங்களின் மனநிலையை விட குழந்தையின் ஆரோக்கியம் முக்கியமானது என்பது நினைவில் கொண்டு செயல்படுங்கள். எல்லாப் பெண்களுக்கும் பிரசவகால அறிவுரையாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது. இது போன்ற சூழலில் ஆன்லைன் பார்த்து தவறான செய்திகளைத் தெரிந்துகொள்ளாமல், அம்மாக்களின் அனுபவங்களைக் கேளுங்கள்.

ஒவ்வொரு முறை பால் புகட்டும்போதும் சுவாசிக்க ஏதுவாகக் குழந்தையின் மூக்கு மேல்நோக்கி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். சில குழந்தைகள் முழுமையாகப் பால் குடிக்காமல், குடிக்க ஆரம்பித்ததும் தூங்கிவிடுவார்கள். குழந்தை தூங்கிவிடாமல் இருக்க விரலால் குழந்தையை வருடிக்கொண்டே இருக்கலாம்.

தாய்ப்பால்!

தாய்க்குப் பால் அதிகமாகச் சுரக்கும்பட்சத்தில் குழந்தை வேகமாகக் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்தநேரம் குழந்தைக்குப் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, சிறிதுநேரம் கழித்து கொடுக்க வேண்டும்.

குழந்தை வெறும் முலைக்காம்பில் மட்டும் வாய் வைத்து பால் அருந்தாமல், காம்பைச் சுற்றியுள்ள முகட்டையும் சேர்த்து வாயை வைக்குமாறு பழக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பால் அதிகம் சுரக்கும். தாய்க்கும் வலி எடுக்காது.

தாய்ப்பால்

குழந்தை பால் குடித்து முடித்து உள்ளே சென்ற காற்று வெளியேறி ஏப்பம்விடும் சத்தம் வரும்வரை தோளில்போட்டு மென்மையாகத் தட்டிக்கொடுக்க வேண்டும். பால் கொடுத்தவுடன் தொட்டிலில்போட்டு ஆட்டினால் மூக்கு வழியாகக் காற்று வெளியேறி ஆபத்தை விளைவிக்கலாம்.

தாய்க்குப் பால் சுரக்கவில்லை, குழந்தைக்குப் பால் போதவில்லை என்றால் நேர்மறை சிந்தனையுடன் யோசிக்க வேண்டும். `இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் அதிகம் நீர் ஊறும்' என்பதுபோல புகட்டப் புகட்டப் பால் சுரக்கும். குழந்தையின் தேவைக்கேற்ப பால் சுரக்கும். குழந்தையின் எடை அதிகரிக்கவில்லை என்றாலும், மருத்துவர் ஒரு சில காரணங்களுக்காகத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் மட்டுமே மாற்று வழியை நாட வேண்டும். காம்பில் வெடிப்பு, உள்ளே இழுக்கப்பட்ட நிலை ஏற்பட்டவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மீண்டும் தாய்ப்பாலையே புகட்ட வேண்டும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

பசியே இல்லையா; இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

''அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது. ஒரு வாரத்துக்கும் மேல் பசியின்மை தொடர்ந்தால், அது ந... மேலும் பார்க்க

Doctor Vikatan: சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் கற்பூராதி தைலம்; எல்லோரும் பயன்படுத்தலாமா?!

Doctor Vikatan:குழந்தைகளுக்கு சளி, மூச்சுத்திணறல் ஏற்படும்போது கற்பூரம் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். ஆனால், சித்த மருத்துவத்தில் கற்பூராதி தைலம் பயன்பாட்டில் இரு... மேலும் பார்க்க

Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்

உங்கள் ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்றால், உங்கள் உடலில் வைட்டமின் டி மிக மிக அவசியம். அதனால்தான், அந்தக் காலத்தில் 'சூரிய ஒளி புகாத வீட்டுக்குள் வைத்தியர் அடிக்கடி புகுவார்' என்பார்கள். அதாவது, சூரிய ஒளி... மேலும் பார்க்க

Apollo: ‘எண்டு-ஓ செக்’-ஐ அறிமுகம் செய்த அப்போலோ!

பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் (ACC) மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) எண்டு-ஓ செக் (End-O Check) எ... மேலும் பார்க்க

CRIB: இந்தியாவில் புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு! - விவரம் என்ன?

இதுவரை உலகம் முழுக்க 47 வகை ரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை. முதன் முதலில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கார்ல் லான்ஸ்டீனர... மேலும் பார்க்க

உதகை: அரசு மருத்துவமனையில் பேட்டரி சேவை அறிமுகம்!

உதகை அரசு மருத்துவக் கல்லூரியில், கல்லூரியின் நிதியில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனம், நுழைவாயிலிலிருந்து ஓ.பி பிளாக் வரை செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் சேவை, நிர்வாகம் சார்பில... மேலும் பார்க்க