செய்திகள் :

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

post image

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில், பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

ரஷியாவிடம் நீண்டகாலமாகவே எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மீது முதலில் 25 சதவிகித வரி அறிவித்தார். தொடர்ந்து, மேலும் 25 சதவிகித வரியை விதித்தார், டிரம்ப்.

அமெரிக்காவுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருக்கும் இந்தியா மீது 50 சதவிகித வரிவிதிப்பு என்பது ஏற்கத்தக்கதல்ல என்று பல்வேறு நாடுகளும் கூறி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும்விதமாக இந்தியாவும் 50 சதவிகித வரியை அவர்கள் மீது விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் சசி தரூர் பேசுகையில், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் 17 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் 50 சதவிகிதம் விதிக்கின்றனர்.

நாம் மட்டும் ஏன் 17 சதவிகிதத்துடன் நிறுத்த வேண்டும்? நாமும் 50 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை என்றால், நாமும் அவர்களைப் பற்றி கவலைப்படக் கூடாது.

நம்முடைய நட்பு நாடு என்று நினைத்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, நட்பார்ந்த விஷயம் அல்ல. இவற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில்தான், நாம் பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க வேண்டும்.

யுரேனியம், பல்லேடியம், உரம் போன்ற பொருள்களை ரஷியாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடே.

சீனாதான் இந்தியாவைவிட ரஷியாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்குகிறது. ஆனால், சீனாவுக்கு மட்டும் 90 நாள்கள் கெடு விதித்துள்ளனர்; நமக்கு 3 வாரங்கள் மட்டுமே.

இதையும் படிக்க:புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

Trump Doubles India Tariffs, Shashi Tharoor's Advice On Next Steps

உத்தரகாசி பேரிடர்: 50 பேர் மாயம்! மீட்புப் பணியில் விமானப் படை!

உத்தரகண்ட் மாநிலத்தில், மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. உத்தரகாசி மாவட்டத்தில், கடந்த ஆக.5 ஆம் தேத... மேலும் பார்க்க

ராகுலின் மூளைதான் திருடுபோய்விட்டது..! மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் கடும் தாக்கு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் மூளை திருடுபோய்விட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேட... மேலும் பார்க்க

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர... மேலும் பார்க்க

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மத்திய அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடு... மேலும் பார்க்க

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

புது தில்லி: அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுவதாக உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறையால் நடத்தப்பட... மேலும் பார்க்க

சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!

ஒடிசாவில் கஜபதி மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக ஒருவரைக் கிராமத்தினர் அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 28ஆம் தேதி இரவு மாவட்டத்தில் உள்ள மோகனா காவல் எல்லைக்குள்பட்ட க... மேலும் பார்க்க