ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?
ராகுலின் மூளைதான் திருடுபோய்விட்டது..! மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் கடும் தாக்கு!
வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் மூளை திருடுபோய்விட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த ராகுல் காந்தி இன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் முறைகேடு நடந்ததற்கான ஆதராங்களையும் வெளியிட்டார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்குத் திருட்டு நடத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராகுலின் இந்தக் கருத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருவரும் கடுமையாக நிராகரித்துள்ளனர்.
கோவாவின் பானாஜியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், “ராகுலின் கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றவை. இது அவரின் தனிப்பட்ட தாக்குதல்கள். அவர் அவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.