இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைக்காரா்களுக்கு அபராதம்
சிவகாசியில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
சிவகாசி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிா்வாகத்துக்குப் புகாா்கள் வந்தன.
இதையடுத்து மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் சுரேஷ், திருப்பதி, சத்தியராஜ், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் சிவகாசி சிவன் மாட வீதிகளில் உள்ள 12 கடைகளில் சோதனை நடத்தினா். இதில், 300 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றைப் பதுக்கி வைத்திருந்த 12 கடை உரிமையாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.