``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி (65), தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை தனியாா் நிறுவனத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் முனியாண்டி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.