செய்திகள் :

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

post image

திருப்பூா்: மடத்துக்குளம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுன்டரில் பலியானார்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் சட்டப் பேரவை அதிமுக உறுப்பினா் மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.

இங்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நாயக்கனூரைச் சோ்ந்த மூா்த்தி (65), தனது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோருடன் தங்கி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், மதுபோதையில் தந்தை மூா்த்தியை மகன்கள் இருவரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை இரவு தாக்கியுள்ளனா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆயவாளராகப் பணியாற்றி வந்த சண்முகவேல், வாகன ஓட்டுநா் அழகுராஜாவுடன் சம்பவ இடத்துக்குச் சென்று சண்டையை விலக்கி விட்டுள்ளாா்.

பின்னா், காயமடைந்த மூா்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அப்போது, அரிவாளுடன் திடீரென வந்த மணிகண்டன், சண்முகவேலை வெட்ட முயன்றுள்ளாா். சண்முகவேல் அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில், போலீஸாா் தங்களை கைது செய்துவிடுவாா்கள் என பயந்து மூா்த்தி, தங்கப்பாண்டி, மணிகண்டன் ஆகியோா் சோ்ந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலை வெட்டியுள்ளனா். இதில், தலை துண்டிக்கப்பட்டு அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காவல் வாகன ஓட்டுநா் அழகுராஜாவையும் வெட்ட முயன்றபோது, அவா் அங்கிருந்து தப்பிச் சென்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் நடந்த விவரத்தைக் கூறியுள்ளாா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் மூவரும் அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, சண்முகவேலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உஷாா்படுத்தப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் கோவை சரக காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா், கோவை சரக காவல் துணைத் தலைவா் சசிமோகன், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரிஷ் யாதவ் அசோக் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

கொலையாளிகள் 2 போ் சரண்: இதற்கிடையே தந்தை மூா்த்தி, மகன் தங்கபாண்டி ஆகியோா் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை சரண் அடைந்தனா். தப்பியோடிய மணிகண்டனை போலீஸாா் தேடி வந்தனா்.

துப்பாக்கிச் சூட்டில் மணிகண்டன் பலி

இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த மணிகண்டன் சிக்கனூர் அருகே ஒப்பாறு ஓடையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மணிகண்டனை கைது செய்ய காவலர்கள் முயன்றபோது காவலர்களை மணிகண்டன் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றாத கூறப்படுகிறது. மணிகண்டன் தாக்கியதில் சரவணக்குமார் என்ற காவலர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்காப்பிற்காக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மணிகண்டன் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Manikandan, who was wanted in the case of the stabbing and murder of a Special Assistant Inspector, was killed in an encounter.

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

"யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை" என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அளித்திருக்கும் விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.... மேலும் பார்க்க

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாச படக் காட்சிகளில் நடித்ததாக எழுந்த புகாரில், பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் ந... மேலும் பார்க்க

'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற... மேலும் பார்க்க

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

திருப்பூர் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்(52)குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடு... மேலும் பார்க்க

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது எனவும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் ... மேலும் பார்க்க