செய்திகள் :

Coolie: ''மை பாய்ஸ், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்!" - உதவி இயக்குநர்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்

post image

'கூலி' படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, ஹைதராபாத்திலும் படக்குழுவினர் ஒரு புரோமோஷன் நிகழ்வை நடத்தியிருந்தனர்.

Coolie Team
Coolie Team

மும்பையில் வருகிற 11-ம் தேதி ஒரு நிகழ்வை நடத்துவதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் எப்போது தன் உதவி இயக்குநர்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பட நிகழ்வுகளில் அவர்களை மேடையிலேற்றி பாராட்டுவார்.

தற்போது தனது உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "‘கூலி’ இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்திற்காக தங்கள் இதயத்தை முழுமையாக அர்ப்பணித்து உழைத்த முழு குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

2 ஆண்டுகளில் 140 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக உழைத்திருக்கிறீர்கள்! இந்தத் திரைப்படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. மை பாய்ஸ், உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Nepoleon: `அமெரிக்க முறைப்படி திருமணம்!' - நெப்போலியனின் மகனுக்கு அமெரிக்க முறைப்படி திருமணம்!

முறுக்கு மீசை, மிடுக்கான தோற்றம் என கிராமத்து கதைகளில் நடித்து நம்மிடையே பரிச்சயமானவர் நடிகர் நெப்போலியன். அவருடைய மகன் தனுஷின் சதை சிதைவு நோயின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர், தன் மகனின் எதிர்கா... மேலும் பார்க்க

National Awards: "தேசிய விருதுகளை இப்படி தான் தேர்வு செய்வாங்க!" - விரிவாக விளக்கும் ஜூரி

71-வது தேசிய விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழில் 'பார்கிங்' திரைப்படத்திற்கு மொத்தமாக மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதைத் தாண்டி, ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த பாடல்களுக்கான த... மேலும் பார்க்க

Tourist Family: "நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே நல்லது நடக்கும்" - சசிகுமார் குறித்து த்ரிஷா

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படம... மேலும் பார்க்க

Deva: `வருத்தமாக இருக்கிறது' - தேவாவுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து சகோதரர் சபேஷ்

அறிமுக இயக்குநர் ஜுன் மோசஸ் எழுதி இயக்கும் படம் ‘பேய் கதை’. இதில் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உள்ளிட்ட பலர் ந... மேலும் பார்க்க