செய்திகள் :

Nepoleon: `அமெரிக்க முறைப்படி திருமணம்!' - நெப்போலியனின் மகனுக்கு அமெரிக்க முறைப்படி திருமணம்!

post image

முறுக்கு மீசை, மிடுக்கான தோற்றம் என கிராமத்து கதைகளில் நடித்து நம்மிடையே பரிச்சயமானவர் நடிகர் நெப்போலியன்.

அவருடைய மகன் தனுஷின் சதை சிதைவு நோயின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர், தன் மகனின் எதிர்காலத்தை எண்ணி அங்கேயே முழுமையாக இப்போது வசித்து வருகிறார்.

Nepoleon Son Marriage
Nepoleon Son Marriage

திருநெல்வேலியைச் சேர்ந்த அக்‌ஷயா என்பவருடன் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு கடந்த ஆண்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றிருந்தது.

ஜப்பானில் பிரமாண்டமான முறையில் அந்த திருமணம் நடைபெற்றிருந்தது. தனது மகனின் ஆசைக்காக ஜப்பானில் திருமணத்தை நடத்தியிருந்தார் நடிகர் நெப்போலியன்.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க முறைப்படி தன் மகனுக்கு திருமணத்தை நடத்தியிருக்கிறார்.

அது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் நெப்போலியன், "அமெரிக்க முறை திருமணம். அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்.

உங்களின் அன்போடும் ஆசீர்வாதத்துடனும், அமெரிக்க அரசின் திருமண அனுமதி பெற்று, நேஷ்வில்லில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில், நேஷ்வில் ஶ்ரீ கணேஷ் கோவிலின் மூத்த குருக்களின் வாழ்த்துகளோடு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில், அமெரிக்க முறைப்படி, எங்கள் மகன் தனுஷுக்கும் அக்‌ஷயாவிற்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.

உங்களின் மேலான பார்வைக்கும், உங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல கோடி!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இந்த திருமணத்திற்கு திரைத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Mundhanai Mudichu: ``பாக்கியராஜ் சார் புடவை அணிந்து எனக்கு நடிக்க சொல்லிக் கொடுப்பார்!'' - ஊர்வசி

நடிகை ஊர்வசிக்கு 'உள்ளொழுக்கு' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இதற்கு முன் 2005-ம் ஆண்டு இவர் நடித்திருந்த 'அச்சுவின்டே அம்மா' என்ற திரைப்படத்திற்காக தேசிய விர... மேலும் பார்க்க

"சாதி வேணுமா வேணாமானு முதல்வர் கிட்ட கேளுங்க; நடிகனா என்னால என்ன பண்ண முடியும்?" - நடிகர் சாய் தீனா

திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியின் மகன் சுர்ஜித் என்பவர், தனது அக்காவை காதலித்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் என்பவரைக் கடந்த ஜூலை 27-ம் தேதி வெட்டி ஆணவப் படுகொலை செய்த சம்பவம் மாநில அ... மேலும் பார்க்க

Urvashi: ''கேமராவைக் கண்டு அஞ்சி மயங்கி விழுந்திருக்கிறேன்!" - பகிர்கிறார் ஊர்வசி

நடிகை ஊர்வசிக்கு 'உள்ளொழுக்கு' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இதற்கு முன் 2005-ம் ஆண்டு இவர் நடித்திருந்த 'அச்சுவின்டே அம்மா' என்ற திரைப்படத்திற்காக தேசிய விர... மேலும் பார்க்க

Single Pasanga: "மார்க்கெட் இல்லைனு இங்க வந்திருக்கேனா?" - பார்த்திபன் சொல்லும் பதில் என்ன?

ஜீ தமிழில் 'சிங்கிள் பசங்க' என்ற புதிய நிகழ்ச்சி ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்க, நடிகர் பார்த்திபன், நடிகைகள் ஆலியா மானசா மற்றும் ஷ்ருதிகா ஆகிய... மேலும் பார்க்க

Coolie: ''மை பாய்ஸ், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்!" - உதவி இயக்குநர்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்

'கூலி' படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற... மேலும் பார்க்க