Mariselvaraj-ஐ வாழ்த்தி பாடிய Vadivelu at Ananda Vikatan Cinema Awards 2024 | UN...
டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
மாட் ஹென்றி, ஸகாரி ஃபோல்க்ஸ் அசத்தல்
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரண்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, டஃபாட்ஸ்வா சிகா 33 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஸகாரி ஃபோல்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
டெவான் கான்வே, வில் யங் அரைசதம்
ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். நியூசிலாந்து அணி 162 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. வில் யங் 101 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. டெவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கோப் டஃபி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங்குக்கு வந்திருப்பேன்: கிறிஸ் வோக்ஸ்
New Zealand were 174 for one at the end of the first day of the second Test against Zimbabwe.