செய்திகள் :

`முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வீட்டுக்கே வரும்' - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

post image

ஆந்திர பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருள்களை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலேயே வந்து தரும்படியிலான திட்டம் தொடங்கப்படவுள்ளது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,

"மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 12.8.2025 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,197 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்." எனக் கூறப்பட்டுள்ளது.

கேரள அரசுடன் இணைந்து பணியாற்ற Vloggers, Youtubers, Instagram இன்ஃப்ளூயன்சர்களுக்கு அழைப்பு

கேரளாவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் கேரளாவின் வளர்ச்சியைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 'Vloggers, Youtubers, Instagram, Facebook' உள்ளிட்ட சமூக ... மேலும் பார்க்க

"Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!" - கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன?

ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியலில் தொடர்ந்து வலுத்துவரும் சூழலில், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள். இந்த திடீர் சந்தி... மேலும் பார்க்க

"இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு தமிழ்நாடு" - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசுதான் என பெருமிதத்துடன் கூறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதி... மேலும் பார்க்க

Bihar: "என் அப்பாதான் ஆணவப்படுகொலை செய்தார்; என் மடியிலேயே உயிரைவிட்டான் என் காதலன்"-கதறி அழும் பெண்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் தினமும் சாதிய ஆணவப்படுகொலைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நெல்லையில் கவின் ஆணவப்படுகொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) அதே நெல... மேலும் பார்க்க

NTK: `பனை, மாடு மேய்ச்சல், மரம், தண்ணீர், மலை மாநாடுகள்.!' - கைகொடுக்கிறதா சீமானின் புது ரூட்?

‘ஒரணியில் தமிழ்நாடு’, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் சூழலில், மாடு மாநாடு, தண்ணீர் மாநாடு என புது வழி எடுக்கிறது நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை நிறுத்தம்; தபால் பெட்டிகளுக்கு விடைகொடுப்போம்!

டிஜிட்டல் யுகம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் எல்லாமே வேகம் அதிவேகம்தான். காத்திருப்பு என்ற வார்த்தைக்கூட பயன்பாட்டில்லை, கால வேகத்தில் காலாவதியாகிவிட்டது. இங்கிலாந்தில், லோங... மேலும் பார்க்க