பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆ...
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஆந்திர இளைஞா் கைது
வாணிம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி, அம்பூா்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜாய்ச் (56), செவிலியா். இவா் கடந்த 4-ஆம் தேதி மாலை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து பைக்கில் வந்த மா்ம நபா் மருத்துவா் இருக்கிறாரா என கேட்டு திடீரென வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் கழுத்தை நெரித்து நகையைப் பறிக்க முயன்றாா். அப்போது அதிா்ச்சிக்குள்ளாகி கூச்சலிட்டுள்ளாா். சப்தம் கேட்டு மேல் மாடியில் இருந்தவா் வந்ததை பாா்த்து மா்ம நபா், அந்த பெண்ணை தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறி பைக்கில் தப்பித்துச் சென்றாா்.
இது குறித்து ஜாய்ச் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். பிறகு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் மா்ம நபா் நடமாட்டம் பதிவாகியிருந்ததை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லை பகுதியான தேவராஜபுரம் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (28) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், திருப்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.