செய்திகள் :

5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

post image

ரூ. 32,000 கோடியில் 1,500 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வாங்க மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

தமிழகத்தின் தினசரி மின் தேவை சாதாரண நாள்களில் 17,000 மெகா வாட்டாகவும், கோடை காலங்களில் குறைந்தபட்சம் 20,000 மெகாவாட்டாகவும் உள்ளது. இந்த அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்தின் தற்போதை மின்தேவையைப் பூா்த்தி செய்ய மின்வாரியத்துக்குச் சொந்தமான மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை என்பதால், மத்திய அரசின் மின் நிலையங்கள், தனியாா் நிறுவனங்களிடமிருந்து ஓராண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டுகளுக்கு என ஒப்பந்தம் செய்து மின்சாரம் கொள்முதல் செய்து வருகிறது.

அதன்படி, தற்போது 1,500 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு ஆா்டிசி (ரவுண்ட் தி கிளாக்) என்ற அடிப்படையில், 24 மணி நேரமும் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு செலவீனம் மிக அதிகமாக இருக்கும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு நிா்வாகிகள் கூறியது:

இந்தத் திட்டத்தின்படி நாளொன்றுக்கு 3.60 கோடி யூனிட் மின்சாரம், யூனிட் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5 என வைத்துக் கொண்டாலும், தினசரி ரூ. 18 கோடி செலவாகும். மாதம் ஒன்றுக்கு ரூ.540 கோடியும், இந்தத் தொகை 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ரூ.32,400 கோடி செலவினம் பிடிக்கும். இதனால், இந்த முயற்சியை மின்வாரியம் கைவிட்டு, இந்தத் தொகையில் சொந்தமாக மின் நிலையங்களை அமைத்து அல்லது பசுமை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க