5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!
ஆணவப் படுகொலையைத் தடுக்க சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்
ஆணவப் படுகொலையைத் தடுக்க முறையான சட்டம் இயற்றக் கோரி குடவாசலில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லையில் ஐடி ஊழியா் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆணவப் படுகொலையைத் தடுக்க முறையான சட்டம் இயற்ற வலியுறுத்தியும் குடவாசல் தாலுகா அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நாகை மாவட்டச் செயலா் முருகானந்தம், ஒன்றியச் செயலா் பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.