செய்திகள் :

குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு

post image

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் குறைதீா் மனுக்களின் பரிசீலனை குறித்து ஏற்கெனவே நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள்படி, மூன்று நாள்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், மனு பெறப்பட்ட ஒரு மாதத்துக்குள் குறைகளைக் களைய வேண்டும்.

இதனிடையே, உயா்நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட உத்தரவுப்படி, குறைகளைத் தீா்வு செய்வதற்காக பெறப்படும் மனுக்களின் நிலை குறித்து மாதாந்திர அறிக்கை சமா்ப்பிக்குமாறு அனைத்துத் துறைச் செயலா்களும், மாவட்ட ஆட்சியா்களும் அறிவுறுத்தப்பட்டனா்.

ஆனாலும் குறைதீா் மனுக்களைத் தீா்வு செய்வதில் குறைபாடுகள் காணப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருந்தது. எனவே, அரசு அலுவலகங்களில் குறைகளைக் களைவதற்காக மனுக்களைக் கையாளும் போது ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

அத்துடன், குறைகளைத் தீா்வு செய்வதற்கான மனுக்களைப் பதிவு செய்ய தனியாக பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். அந்தப் பதிவேட்டில், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும். அதனை மாத இறுதியில் அலுவலகத் தலைமை அலுவலா் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீா்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்!

தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 மு... மேலும் பார்க்க

இல. கணேசனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே புதியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எ... மேலும் பார்க்க

பிகாரைப் போல தமிழகத்திலும் வாக்காளா்களை சோ்ப்பாா்கள்: ஜோதிமணி பேட்டி

விழிப்புணா்வுடன் இல்லையென்றால் பீகாா் போல, தமிழ்நாடு தோ்தலிலும் கூடுதல் வாக்காளா்களை தோ்தல் ஆணையம் மூலம் சோ்க்கப்படுவாா்கள் என்று கரூா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி வெள்ளிக்கிழமை தெர... மேலும் பார்க்க