5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!
சதுரங்கவல்லபநாதா் கோயிலில் மங்கள சண்டி ஹோமம்
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பெளா்ணமியையொட்டி மங்கள சண்டி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை ,கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், பட்டுப்புடவை ஹோமம், சௌபாக்ய ஹோமம் முதலான ஹோமங்களும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதருக்கு சிறப்பு அபிஷேகம், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயில், கொட்டையூா் அகஸ்தீஸ்வரா் கோயில், ஆதனூா் மழை மாரியம்மன் கோயில், நீடாமங்கலம் சந்தானராமா் கோயில், பழைய நீடாமங்கலம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.