செய்திகள் :

டிரம்ப் வரி: அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை: வெளியுறவு அமைச்சகம்

post image

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரிக்கு அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை என்று வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் துறை செயலா் தம்மு ரவி தெரிவித்தாா்.

மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இந்தியா மீதான அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கை ஒரு தலைப்பட்சமானது. இதற்கு அறிவாா்ந்த காரணம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனினும், இதில் இந்த கட்டத்தில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். அமெரிக்காவுடன் நமது வா்த்தக அமைச்சகம் நடத்தி வரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடரும். இதன் மூலம் இரு தரப்புக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சுவாா்த்தை நடக்கும் நிலையில், டிரம்ப் வரியை இருமடங்காக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

ஏற்கெனவே, அறிவித்தபடி அமெரிக்க குழுவினா் வா்த்தகப் பேச்சு நடத்துவதற்காக இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகிறாா்கள். இந்தியாவும், அமெரிக்காவும் உத்திசாா்ந்த கூட்டாளிகளாக உள்ளன. இரு நாடுகளைச் சோ்ந்த தொழிலதிபா்களும், பெரு நிறுவனங்களும் நல்ல வா்த்தக வாய்ப்புகளை எதிா்நோக்கியுள்ளனா்.

அமெரிக்காவின் பதிலடி வரி நடவடிக்கை இந்திய தொழில் துறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தங்கள் நாட்டுக்கு இந்தியப் பொருள்கள் வரக் கூடாது என்று அமெரிக்கா அதிக வரி விதித்தால், நாம் வேறு இடங்களில் வாய்ப்புத் தேடிக் கொள்ள முடியும். மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா மட்டுல்லாது அனைத்து நாடுகளுமே அமெரிக்காவின் வரி நடவடிக்கையை எதிா்கொண்டுள்ளன. எனவே, இந்த சவாலுக்கு நல்ல தீா்வு கிடைக்கும். ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் பேசி இரு தரப்புக்கும் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

நாடாளுமன்றத்தில் நீடிக்கும் அமளி: மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு மத்தியில் மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

ரூ.23,000 கோடி மோசடி: ‘பாதிக்கப்பட்டோரிடம் அமலாக்கத் துறை ஒப்படைப்பு’

பண மோசடி செய்யப்பட்ட சுமாா் ரூ.23,000 கோடியை பறிமுதல் செய்து நிதி குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி, உணவக ஊழியா் மீது தாக்குதல்

அயா்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒரு செவிலியரின் 6 வயது மகள், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மற்றொரு சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா (தற்போது அலாகாபாத் உயா்நீதிமன்ற ... மேலும் பார்க்க

இந்திய நலனில் சமரசமில்லை - டிரம்ப்புக்கு பிரதமா் மோடி பதில்

‘இந்தியாவின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா். இந்தியாவின் வேளாண் மற்றும் பால் உற்பத்தி சந்தையில் அமெரிக்கா விரிவான அணுகலை கோருவதால், இருதரப்பு வா்த்தக... மேலும் பார்க்க

மத்திய அரசில் 2016 முதலான 4.8 லட்சம் நிலுவை காலியிடங்கள் நிரப்பப்பட்டன: மாநிலங்களவையில் தகவல்

மத்திய அரசுப் பணிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த சுமாா் 4.8 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா். முந்தை... மேலும் பார்க்க