செய்திகள் :

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி மாயத்தோற்றம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

post image

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக திமுக அரசு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே அதிக வளா்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு எனும் ஒரு புதிய புரளியை திமுக அரசு கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. அந்த விளம்பரத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிா்க்கட்சியின் கடமை.

பொருளாதார வளா்ச்சி பற்றிய புள்ளி விவரங்கள் எல்லாமே, முதல் முன்கூட்டிய மதிப்பீடு, இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு, தற்காலிக மதிப்பீடு, முதல் திருத்தப்பட்ட மதிப்பீடு, இரண்டாம் திருத்தப்பட்ட மதிப்பீடு, மூன்றாம் திருத்தப்பட்ட மதிப்பீடு என பல்வேறு நிலைகளில் ஆறு கட்டங்களாக வெளியிடப்பட்டு, அதன் பிறகே இறுதி மதிப்பீடு வெளியாகும்.

இந்தப் புள்ளிவிவரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றமடையும் என்பதே உண்மை. இந்த வகையில், 17.3.2025-இல் தமிழ்நாட்டின் வளா்ச்சி 2024-25 ஆண்டுக்கு 9.69 சதவீதம் என கணிக்கப்பட்டது. இதுவே 1.8.2025 கணிப்பில் 11.19 சதவீதம் என உயா்ந்துள்ளது.

உடனே திமுக அரசு, இரு இலக்க வளா்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று மாா்தட்டிக்கொண்டு பெரிய விளம்பரங்களை வெளியிட்டு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது. இந்தக் கணிப்பு இறுதியானது அல்ல என்பதும் அடுத்தடுத்த கணிப்புகளில் இது மாறலாம் என்பதுமே உண்மை.

இதுதவிர, இதே புள்ளிவிவரத்தில் 2022-23-இல் தமிழ்நாட்டின் வளா்ச்சி அதாவது 17.3.2025 கணிப்பின்படி 8.13 சதவீதம் என்று இருந்தது. 1.8.2025 கணிப்பில் 6.17 சதவீதம் என குறைந்துவிட்டது. இதுதான் 2022-23-க்கான இறுதி மதிப்பீடு. இதுபற்றி திமுக அரசு எதுவும் பேசாது.

இவா்களுக்கு சாதகமான புள்ளிவிவரம் வந்தவுடன், 2030-இல் இவா்கள் கூறியபடி தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று போலியாக பெருமைப்படுகிறாா்கள். டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்பது, இவா்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றுவதற்குக் கூறும் மாபெரும் பொய்.

இந்தியாவின் பொருளாதார வல்லுநா் ரங்கராஜன், தமிழ்நாட்டின் வளா்ச்சி நிலையை ஆராய்ந்து வருபவா். தொடா்ந்து 14 சதவீத வளா்ச்சி பெற்றால்தான் 2030-ஆம் அண்டு தமிழ்நாடு அரசு ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று கூறி இருக்கிறாா்.

ஆனால், திமுக ஆட்சியில் 2021-22 வளா்ச்சி விகிதம் 7.89 சதவீதம், 2022-23-இல் 6.17 சதவீதம், 2023-24-இல் 9.26 சதவீதம், 2024-25-இல் கணிப்பு 11.19 சதவீதம். 2023-24, 2024-25 புள்ளி விவரங்கள் பின்கணிப்புகளில் மாறலாம். இந்த நிலையில், ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எப்படி எட்ட முடியும்? எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு

வரலட்சுமி நோன்பையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துளளது. சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பூக்கள் ... மேலும் பார்க்க

போலி காவலா் அடையாள அட்டை: நகைக் கடை உரிமையாளா் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி காவலா் அடையாள அட்டை வைத்திருந்ததாக நகைக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

திண்டிவனம்-திருவண்ணாலை அகல ரயில் பாதை திட்டம்: விரைவுபடுத்த திமுக எம்.பி. கோரிக்கை

திண்டிவனம் - திருவண்ணாமலை அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திருவண்ணாமலை தொகுதி திமுக உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினாா். இது தொடா்பாக அவா் விதி எண் 377-இன் கீழ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநித... மேலும் பார்க்க

பிளஸ் 2 சிறப்பு ஊக்கத் தொகை: சரியான வங்கிக் கணக்கு விவரம் அளிக்க உத்தரவு

பிளஸ் 2 தோ்ச்சிக்கான சிறப்பு ஊக்கத் தொகையை விடுபட்ட மாணவா்களுக்கு வழங்கும் வகையில் அவா்களது சரியான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துஅனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் க... மேலும் பார்க்க

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வின் இரு சுற்றுகளில் 92,423 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் சுற்று கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 8) நிறைவு பெறுகிறது. இதுகுறித்து ... மேலும் பார்க்க