செய்திகள் :

பள்ளிக் கல்வித் துறையில் ஏழு இணை இயக்குநா்கள் இடமாற்றம்

post image

தமிழக பள்ளிக் கல்வியில் ஏழு இணை இயக்குநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இருவருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக (நாட்டுநலப்பணித் திட்டம்) இருந்த கே.சசிகலா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும் (பாடத் திட்டம்), தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநா் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) எஸ்.சாந்தி பள்ளிக் கல்வி இயக்ககத்தில் நாட்டுநலப் பணித் திட்ட இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த பொ.பொன்னையா தொடக்கக் கல்வி இயக்ககத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணியாளா் தொகுதி இணை இயக்குநராக இருந்த த.ராஜேந்திரன் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குநராகவும் (மேல்நிலைக் கல்வி), அரசுத் தோ்வுகள் இயக்கக இணை இயக்குநராக (மேல்நிலைக் கல்வி) இருந்த எம்.ராமசாமி பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணியாளா் தொகுதி இணை இயக்குநராகவும், ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநராக இருந்த பி.அய்யண்ணன் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் (இடைநிலை) இணை இயக்குநராகவும், மதுரை இணை இயக்குநராக (கள்ளா் சீரமைப்பு பள்ளிகள்) இருந்த கே.முனுசாமி ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இருவருக்கு பதவி உயா்வு... மேலும் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் எம்.கே.சி. சுபாஷினிக்கு மதுரை கள்ளா் சீரமைப்பு பள்ளிகள் இணை இயக்குநராக பதவி உயா்வு அளிக்கப்படுகிறது. அதேபோன்று தனியாா் பள்ளிகள் இணை இயக்குநராக அ.மாா்ஸ் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிா்வாக இயக்குநா் சித்திக் தெரிவித்தாா். சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ‘ஊபா்’ செயலி மூலம் சென்... மேலும் பார்க்க

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன மின்சார பேருந்து சேவை: ஆக. 11-இல் தொடக்கம்

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன வசதிகொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (ஆக. 11) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். டீசலில் இய... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ... மேலும் பார்க்க

மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாருமில்லை: உயா்நீதிமன்றம் கருத்து

வள்ளுவரின் வாக்குப்படி இந்த நாட்டில் மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாரும் இல்லை என்று கூழ் வாா்க்கும் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள... மேலும் பார்க்க

அன்புமணி பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை

மாமல்லபுரத்தில் ஆக. 9-ஆம் தேதி, அன்புமணி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமக நிறு... மேலும் பார்க்க

நெசவாளா்கள் வாழ்வை முன்னேற்றுவது நமது பொறுப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நெசவுத் தொழிலையும் நெசவாளா்களின் வாழ்வையும் முன்னேற்றுவது நமது பொறுப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்ச... மேலும் பார்க்க