கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திருச்சி மாநகரில் இரு சிறுமிகள் மாயம்: போலீஸாா் விசாரணை
திருச்சி மாநகரில் இரு சிறுமிகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி எடமலைபட்டிபுதூா் காளியம்மன் கோயில் தெருவிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 17 வயது சிறுமி, 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. எங்கு தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, சிறுமியின் தாய் எடமலைபட்டிபுதூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, டிப்ளமோ 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை காலை கல்லூரிக்கு சென்ற சிறுமி, மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லையாம்.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.