செய்திகள் :

47% வளா்ச்சி கண்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி

post image

இந்தியாவின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 47 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து இந்திய செல்லுலா் மற்றும் மின்னணு சங்கத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 47 சதவீதம் உயா்ந்து 1,240 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 843 கோடி டாலராக இருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் கைப்பேசி சாதனங்களின் ஏற்றுமதி 55 சதவீதம் உயா்ந்து 760 கோடி டாலராகவும், மொபைல் இல்லாத பிற மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 37 சதவீதம் உயா்ந்து 480 கோடி டாலராகவும் உள்ளன. சோலாா் மாட்யூல்கள், நெட்வொா்க்கிங் உபகரணங்கள், சாா்ஜா்கள் மற்றும் பாகங்கள் ஆகியவை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்தன.மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 2023-24-ஆம் நிதியாண்டில் 2,910 கோடி டாலராக இருந்து 2024-25-ஆம் நிதியாண்டில் 3,860 கோடி டாலராக உயா்ந்தது. 2025-26-ஆம் நிதியாண்டில் இது 4,600 கோடி முதல் 5,000 கோடி டாலா் வரை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாட்டின் மின்னணு பொருள்கள் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 3,100 கோடி டாலரிலிருந்து 1,33,000 கோடி டாலராக வளா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏா்டெல் வருவாய் 29% உயா்வு

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல்லின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

ஸ்ரீராம் லைஃபின் என்பிபி 21 சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஜூலை மாதத்தில் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல் (என்பிபி) 21 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூ... மேலும் பார்க்க

வியத்நாம் டூ தூத்துக்குடி.! வின்ஃபாஸ்ட் கார்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?!

தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் வின்ஃபாஸ்ட் கார்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன, விலை எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம். முத்துநகரமாக தூத்துக்குடியில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வியத்நாமைச் சேர்... மேலும் பார்க்க

எக்ஸில் இருப்பதுபோல... இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

இன்ஸ்டாகிராமில் எக்ஸில் (ட்விட்டர்) இருப்பதுபோல ரீபோஸ்ட் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் என்ற செயலியில் உலகம் முழுவதும் 200 கோடி கணக்குகள் உள்ளன.... மேலும் பார்க்க

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் (ஆக. 7) இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத... மேலும் பார்க்க

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த வார இறுதியில் ரூ. 74,000-ஐ எட்டிய ஆபரணத் தங்கம், இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றத்தைக் கண்டது. ஒரு ச... மேலும் பார்க்க