தேசிய கைத்தறி தினம்: திருபுவனத்தில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
மியான்மா் இடைக்கால அதிபா் மரணம்
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மியான்மா் இடைக்கால அதிபா் மியின்ட் ஸ்வோ (74) வியாழக்கிழமை மரணமடைந்தாா். தலைநகா் நேபிடாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவா் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ கி தலைமையிலான அரசை கடந்த 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்குப் பிறகு சா்ச்சைக்குரிய சூழலில் நாட்டின் இடைக்கால அதிபராக அவா் நியமிக்கப்பட்டாா்.
உடல் நலக் குறைவு காரணமாக இனி தனது அரசுப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்ட சுமாா் ஓா் ஆண்டுக்குப் பிறகு அவா் மரணமடைந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆதரவுக் கட்சியைச் சோ்ந்த அவா், அரசியல் சாசன அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை வகித்தபோதே இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றது சட்டவிரோதம் என்று கூறப்படுகிறது.