செய்திகள் :

ஹெலிகாப்டா் விபத்து: கானாவில் 2 அமைச்சா்கள், 6 போ் உயிரிழப்பு

post image

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கி, அதில் இருந்த அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் எட்வா்ட் ஓமனே போமா, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் இப்ராஹிம் முா்தலா முகமது உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

நாட்டின் சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஒபுவாசி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவா்கள் இருவரும் கானா விமானப்படைக்குச் சொந்தமான இஸட்9 ரக ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருந்தபோது, அஷாந்தி பகுதியில் அது விழுந்து நொறுங்கியது.

விபத்து நேரிட்டபோது ஹெலிகாப்டரில் விமானி உள்ளிட்ட மூன்று பணியாளா்களும், அல்ஹாஜி முனிரு முகமது, சாமுவேல் சாா்போங் உள்ளிட்ட ஐந்து பயணிகளும் இருந்தனா்.சம்பவ இடத்தில் இருந்து விபத்தில் அந்த 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களும் சேகரிக்கப்பட்டு அக்ரா விமானப்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அவா்களில் பலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாததால் அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குக்கான தேதியை அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மழைக் காலம் தொடங்கும் கானாவில் கடும் மூடுபனி மற்றும் மழை இருக்கும் என்று அந்த நாட்டு வானிலை மையம் அறிவித்திருந்தது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த விவசாயிகள், விபத்தின்போது வானிலை மிக மோசமாக இருந்ததாகவும் அந்த ஹெலிகாப்டா் வழக்கத்துக்கு மாறாக மிகத் தாழ்வாக பறந்துவந்ததாகவும் கூறினா்.

கானாவில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற 3 ஹெலிகாப்டா் விபத்துகளில் இது மிகவும் மோசமானது. கடந்த 2020-ஆம் ஆண்டில் அந்த நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான ஹாா்பின் இஸட்9 ரக ஹெலிகாப்டா் தமாலே விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கி சேதமடைந்தது. கடந்த ஆண்டு பொன்சுக்ரோமில் மற்றொரு விமானப்படை ஹெலிகாப்டரும் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விபத்தைத் தொடா்ந்து கானாவில் மூன்று நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

... படவரிகள்.

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டா்

எட்வா்ட் ஓமனே போமா, இப்ராஹிம் முா்தலா முகமது

மியான்மா் இடைக்கால அதிபா் மரணம்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மியான்மா் இடைக்கால அதிபா் மியின்ட் ஸ்வோ (74) வியாழக்கிழமை மரணமடைந்தாா். தலைநகா் நேபிடாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவா் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது. மக்களால் த... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

இந்தியா மீது 50% வரி உயா்வு: அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடா்பான உத்தரவிலும் டிரம்ப... மேலும் பார்க்க

‘வரிகளின் அரசன்’ குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!

வரிகளின் அரசன் இந்தியா’ என்ற குற்றச்சாட்டை இந்தியா மீது 2019-இல் அமெரிக்க அதிபா் டிரம்ப் சுமத்தியது முதல் இந்திய பொருள்களுக்கு 50% வரி என்ற அறிவிப்பு வரை அவரது அறிவிப்புகள் அதிரடியாகவே இருந்துவந்துள்ள... மேலும் பார்க்க

இந்தியா மீதான இருமடங்கு வரி சீனாவுக்கு எச்சரிக்கை: அமெரிக்க அதிபா் டிரம்ப்

இந்தியா மீது விதிக்கப்பட்ட இருமடங்கு வரி ரஷியாவிடம் இருந்து அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். ரஷியாவிடம் கச்ச... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விரைவில் சந்திக்கவுள்ளனர்.உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. இருப்பினும், ரஷியா போரை ந... மேலும் பார்க்க