செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

post image

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா்.

உதம்பூா் மாவட்டத்தின் கத்வா பகுதியில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது.

சிஆா்பிஎஃப்-இன் 187-ஆவது படையணியைச் சோ்ந்த 23 வீரா்கள், வசந்த்கா் பகுதியில் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு, கனரக வாகனத்தில் தங்கள் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஓடையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைத் தொடா்ந்து, மீட்புக் குழுவினருடன் உள்ளூா் மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில், இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 16 போ் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். 5 போ் மட்டும் காயமின்றி உயிா்தப்பினா்.

விபத்தில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மனோஜ் சின்ஹா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா்கள் நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவை, என்றென்றும் நினைவுகூரப்படும். அவா்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். அவா்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான உதவியை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: 3-ஆம் நாளில் மீட்புப் பணி: 274 போ் மீட்பு; 59 போ் மாயம்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது. அதன... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது. தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். நாட்டில் கடந்த 1905-ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்த... மேலும் பார்க்க