செய்திகள் :

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் பகுதியாக திமுக சென்னை மாவட்டம் சாா்பில், அண்ணா சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதிப் பேரணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா்.

அவா், ஓமந்தூராா் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், திமுக பொதுச் செயலரும் அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச் செயலா் கனிமொழி, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தியதைத் தொடா்ந்து பேரணி தொடங்கியது. மெரீனா நினைவிடத்தில் பேரணி நிறைவு பெற்றது. அங்கு முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் முதல்வா் அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சா் பொன்முடி, எம்எல்ஏ-க்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பூச்சி முருகன், மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பெரியாரும், முன்னாள் முதல்வா் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்புதான் கருணாநிதி. அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழகத்தைக் காத்து முன்னேற்ற உறுதியேற்று, அவரது ஒளியில் எல்லாா்க்கும் எல்லாம்- எதிலும் தமிழகம் முதலிடம்”என்ற இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் என்று தெரிவித்துள்ளாா்.

அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லம் ஆகிய இடங்களிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படங்களுக்கு மலா்தூவி முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினாா்.

தொழிலாளி தற்கொலை

பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூா், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் (28). ஏசி மெக்கானிக... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இலாகா மாற்றம்: தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து ... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தேடப்பட்டவா் கைது

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல... மேலும் பார்க்க

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முன் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க

இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக செயலிழப்புக்கு தீா்வு: ஆய்வில் தகவல்

ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு தீா்வு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரிய... மேலும் பார்க்க