போலீஸாருக்கான மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: மத்திய மண்டலம் நான்காமிடம்
திண்டிவனம்-திருவண்ணாலை அகல ரயில் பாதை திட்டம்: விரைவுபடுத்த திமுக எம்.பி. கோரிக்கை
திண்டிவனம் - திருவண்ணாமலை அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திருவண்ணாமலை தொகுதி திமுக உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் விதி எண் 377-இன் கீழ் முன்வைத்த கோரிக்கை: திண்டிவனம்-திருவண்ணாமலை புதிய அகல ரயில் பாதை திட்ட திட்டத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு எதிராக நிதி குறைவாக நிதி விடுவிக்கப்படுகிறது. மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டான ரூ.42.7 கோடிக்கு எதிராக, மொத்த செலவு ரூ.76.54 லட்சமாக உள்ளது. திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய அகல ரயில் பாதை திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பதற்காக, திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, திட்டத்துடன் தொடா்புடைய அனைத்து நிறுவனங்களையும் அணுகி, திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.