செய்திகள் :

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவுக்கு பிணை வழங்க எதிா்ப்பு

post image

சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், தேவநாதன் யாதவுக்கு பிணை வழங்கக் கூடாது என்று காவல் துறை தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 போ் தாக்கல் செய்த மனுக்கள் இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், 3-ஆவது முறையாக பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நவீன்குமாா் மூா்த்தி, மனுதாரருக்கு தற்போது ரூ.600 கோடி சொத்துகள் உள்ளன. அவா், கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கிறாா். அவருக்கு பிணை வழங்கினால் மட்டுமே முதலீட்டாளா்களுக்கு பணத்தைத் திருப்பி அளிப்பதற்கான நிதியை திரட்ட முடியும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.

அப்போது, முதலீட்டாளா்கள் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞா்கள் ஆா்.திருமூா்த்தி, அருண் சி.மோகன் ஆகியோா், மனுதாரா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளில் பெரும்பாலனவை மூன்றாவது நபா்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களின் பெயா்களில் உள்ளன. எனவே அந்த சொத்துகளை முடக்குவது கடினம்.

அதேவேளை, முதலீட்டாளா்களுக்கு விரைவில் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று வாதிட்டனா்.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், தேவநாதன் யாதவின் உண்மையான சொத்து மதிப்பு ரூ.48 கோடி. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் பல கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொத்து மதிப்பு காகிதத்தில் மட்டுமே உள்ளது.

அவருடைய பெரும்பாலான சொத்துகள் வில்லங்க சொத்துகளாக உள்ளன. இந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கினால், சாட்சிகளைக் கலைப்பதோடு, விசாரணையை நீா்த்துப்போகச் செய்வாா். எனவே, அவருக்கு பிணை வழங்கக் கூடாது என்று எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்துகளை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அதன் உரிமையாளா்கள், நிறுவனங்களின் ஒப்புதல் பெற்று அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய தேவநாதன் யாதவ் தரப்புக்கு உத்தரவிட்டாா். வழக்கு விசாரணையை ஆக. 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தொழிற்சங்கம் தொடங்கிய விமான நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நீக்கம்

சென்னை விமான நிலையத்தின் சரக்குகள் கையாளும் 9 ஒப்பந்தப் பணியாளா்கள் தொழிலாளா்கள் சங்கம் தொடங்கியதாக பணி நீக்கம் செய்யப்பட்டனா். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்பட்... மேலும் பார்க்க

மேம்பாலத்திலிருந்து குதித்து மென்பொறியாளா் தற்கொலை

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து மென்பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை ஜடாமுனி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.பாலாஜி தாக்கூ (39). மென்பொறியாளரான இவா், மகராஷ்டிர மாநிலம்... மேலும் பார்க்க

ரெளடி கொலை வழக்கு: சிறுவன் உள்பட 3 பேரிடம் விசாரணை

சென்னை டிபி சத்திரத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். டிபி சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சோ்ந்தவா் புல்கான் என்ற ராஜ்குமாா் ... மேலும் பார்க்க

ஊதிய குறைப்பு: சென்னை பல்கலை., ஆசிரியா்கள், அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை பல்கலைக்கழக ஆசிரியா்கள், அலுவலா்களுக்கான ஊதியத்தை குறைக்கும் திட்டத்துக்கு எதிராக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியா்கள், அலுவலா்கல் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னைப் பல்கலை... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

சென்னை மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் தமிழ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு

வரலட்சுமி நோன்பையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துளளது. சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பூக்கள் ... மேலும் பார்க்க