கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்று வரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டட கட்டுமானப் பணியை புதன்கிழமை அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் தொகுதி அலுவலகம், இ-சேவை மைய கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதனை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.