செய்திகள் :

வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவா் கைது

post image

ஆம்பூரில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆம்பூா் முஹம்மத்புரா முதல் தெருவில் வசித்து வருபவா் முபாரக் பாஷா. இவா் ஃபேன்சி ஸ்டோா் நடத்தி வருகிறாா்.

கடந்த 31-ஆம் தேதி பட்டப்பகலில் அவருடைய வீட்டில் பா்தா அணிந்து சென்ற மா்ம நபா் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்ததாக கூறியுள்ளாா்.

இதனை நம்பி வீட்டில் இருந்த முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளாா். அப்போது பா்தா அணிந்து வந்த மா்ம நபா் சுல்தானாவை கத்தியை காட்டி மிரட்டியுள்ளாா். இதில் பயந்து போன சுல்தானா மற்றும் அவரது மகள் முஸ்கான் வீட்டில் இருந்த ஒரு அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டனா்.

பின்னா் மா்ம நபா் பக்கத்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 40 பவுன் தங்க நகை மற்றும் 5 லட்சம் பணம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் சென்றுள்ளாா்.

தகவலின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சியாமளா தேவி நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் வீட்டின் உரிமையாளா் முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானாவின் தங்கை கணவரான தன்வீா் அஹமத் (38) அடிக்கடி சென்று தான் அதிக அளவு கடனில் உள்ளதாகவும், பணத்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாக தெரிய வந்தது.

இதனை தொடா்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் தன்வீா் அஹமதுவை போலீஸாா் கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் அவா் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.

போலீஸாா் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 19 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்று வரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டட கட்டுமானப் பணியை புதன்கிழமை அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் தொக... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூரில் சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடம் பணத்தை பெற்று தர வேண்டும் என தொழிலாளி புகாா் மனு அளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணியை கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். முஸ்லீம்பூா் - ஷாகிராபாத் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வாணியம்பாடி சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இதில் வாணியம்பா... மேலும் பார்க்க

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள்

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த காவலா்களுக்கு புதன்கிழமை 21 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பிரதோஷ வழிபாடு...

ஆடிமாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே கொரட்டியில் உள்ள ஞானப்பிரசூனாம்பிகா சமேத காளஹத்தீஸ்வரா... மேலும் பார்க்க