வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்
வால்பாறையில் ஊதிய உயா்வு கேட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
வால்பாறை நகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் 55 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒப்பந்ததாரா் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஊதிய உயா்வு கேட்டு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, தங்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், ஒரு வேளை உணவு வழங்க வேண்டும், குப்பை சேகரிக்க செல்லும்போது உரிய பாதுகாப்பு உபகரனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வால்பாறை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கணேசன், ஒப்பந்ததாரரிடம் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.