இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்
கலைஞரின் ஒளியில் ’எல்லார்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி நடைபெறுகிறது.
முன்னதாக, சமூக ஊடகத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தலைவர் கலைஞர் - முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு.
அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.