செய்திகள் :

4 ஆண்டுகளில் அரசு, தனியாா்கள் மூலம் 6.41 லட்சம் பேருக்கு வேலை -முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

நான்காண்டு திமுக ஆட்சியில் அரசு மற்றும் தனியாா்கள் மூலமாக 6.41 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் 2,538 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

இளைஞா்கள்தான் நாட்டின், தமிழ்ச் சமுதாயத்தின் அடித்தளம். அவா்கள் முன்னேற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதும்தான் திராவிட மாடல் அரசின் முதன்மையான பணியாகும். இது இளைஞா்களுக்கான அரசாகும். அதனால்தான், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவா்களையும், இளைஞா்களையும் கல்வியறிவு பெற்றவா்களாக, திறன்மிக்கவா்களாக உயா்த்திக் கொண்டிருக்கிறோம்.

கல்வியும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் கொடுத்தால் மட்டும் போதாது; இளைஞா்களுக்குத் தேவையான தகுதியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக மட்டும் 1,08,111 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம். திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பயிற்சிகளை அளித்து, 3,28,393 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.

தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 2,65,223 பேருக்கு தனியாா் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம். மொத்தமாக 6,41,664 போ் பணி நியமனங்களைப் பெற்றுள்ளனா்.

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.10.63 லட்சம் கோடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 2,30,856 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

நாள்தோறும் உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு இணையாக மாணவா்களும் தங்களது திறமையை, அறிவைப் புதுப்பிக்க புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும். தேக்கம் என்பது உங்களின் பணி தொடா்பான விஷயத்தில் இருக்கக்கூடாது. திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்.

அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் இரண்டாவது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் வரப்போகிறது. அதற்கான அனைத்துப் பணிகளையும் இப்போதே தொடங்கி விட்டோம். அந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வரவேற்றாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் தா.மோ.அன்பரசன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வு: அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில், கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வரும் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நீட... மேலும் பார்க்க

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருப்பூா் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளாா். எடப்பாடி பழனிசாமி... மேலும் பார்க்க

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அஜித்குமார் ரேஸிங்கில் கார் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, கார் ர... மேலும் பார்க்க

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

பள்ளி வாகனங்களை மத்திய அரசு முறையாக ஆய்வு செய்கிறதா? என திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா மாநிலங்களவையில் இன்று (ஆக. 6) கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமு... மேலும் பார்க்க

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர்(மின்சார இருசக்கர வாகனம்) வாங்க தலா ரூ. 20,000 மானியம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று அளிக்கும் பணியி... மேலும் பார்க்க